தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு
http://blog.nilavan.net
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு' தமிழை நேசிக்கும், நேசிக்க துடிக்கும் ஒவ்வொருவனும் பார்த்து ரசிக்க வேண்டிய முக்கியமான நிகழ்ச்சி ஆகும். விஜய் தொலைக்காட்சி சிறப்பான, வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தனிமுத்திரை பதித்து வருகிறது. அதன் ஒரு தமிழ் தொண்டாக தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு அமைந்துள்ளது.தமிழின் பெருமைகளையும் இலக்கியங்கள் பலவற்றின் அருமைகளையும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு இளைய சமுதாயத்தின் மூலமே அளிக்கிற பணி மிகச்சிறந்த பணியாகும். இந்நிகழ்ச்சி பேச்சாற்றலுக்கு மட்டுமல்லாமல் அப்பேச்சின் மூலம் பள்ளிப் படிப்பு முடித்தவுடன் மூட்டைகட்டி விடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் அருமையையும், அந்நூல்களைப் படிக்க வேண்டும் என்னும் ஆவலையும் நம்மிடைய ஏற்படுத்துகிறது.ஒவ்வொருவரும் இந்நிகழ்ச்சியை பாருங்கள், பரவசமடையுங்கள் ....தமிழ்ப்பால் பருகுங்கள் என உங்கள் அனைவரையும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
-------------------------------------------------------------------------------------
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு
http://tamil-valai.blogspot.com
இது என் வசனம் இல்லை… இது விஜய் தொலைக்காட்ச்சியின் ஒரு நிகழ்ச்சி. தற்சமயம் சிறுவர்களுக்குள் நடக்கும் இப்போட்டி, முன்னர் பெரியவர்களுக்கு நடத்தப்பட்டது. என்னால் முடிந்தவரையில் விடாமல் பார்ப்பேன்.
நான் பலமுறை தமிழில் பேசவேண்டும் என்று தீர்மானம் எடுத்துகொண்டதுண்டு… பலமுறை என்று சொல்லும்போதே, உங்களுக்கு புரிந்திருக்கும், இதுவரை அது செயல்படுத்த படவில்லை என்று… வேலை நேரத்தில், முழுவதும் தமிழில் பேசுவது இயலாத காரியம் என்பது உண்மை என்று ஆகியேவிட்ட நிலையில், வீட்டிலாவது தமிழில் பேசலாம் என்று முடிவு எடுப்பேன்… ஆனால் மறந்து விடுவேன் : - ). எனக்கு ஞாபக மறதி அதிகம்… என் மனைவி கண்டிப்பாக இதை ஒத்துகொள்ள மாட்டாள்… எனக்கு ஞாபகம் என்று ஒற்று இருக்கிறது என்பதையே அவளால் ஒத்துகொள்ள முடியாது. இந்த முறை என் தீர்மானம் எவ்வளவு நாள் (நேரம்) செயலில் இருக்கிறது என்று பாப்போம்…
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
-------------------------------------------------------------------------------------
http://www.saravanakumaran.com
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் "ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு" நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக ஒளிப்பரப்பான "தமிழா நீ பேசுவது தமிழா" என்ற சுற்று சுவாரஸ்யமாக இருந்தது. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் நாம் நடைமுறையில் பேசுவது போல் ஒரு சொற்றொடரை கூறுவார். அதாவது ஆங்கிலம், சமஸ்கிருதம் கலந்து. அதை போட்டியாளர் தமிழ் வார்த்தைகளால் கூற வேண்டும். நிஜமாகவே ரொம்ப கஷ்டங்க. மற்ற சுற்றுகளில் ஜொலித்தவர்கள் கூட (தமிழாசிரியர்களும்) இதில் திணறினார்கள்.
உதாரணத்திற்கு, பெட்ரோல், டிராக்டர், ரிலாக்ஸ் போன்ற வார்த்தைகளை நினைத்து பாருங்கள். நடுவர்கள் நெல்லை கண்ணன், சுப.வீரபாண்டியன் அருமையாக பேசினார்கள். நெல்லை கண்ணன் ஒரு நவீனகால இளைஞன் கூறியதாக இதை கூறினார், "தமிழுக்கு ஒரு கஷ்டம் என்றால் அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. We will fight for it"!!!. தமிழை அடிப்படையாக வைத்து அமைந்துள்ள இந்த நிகழ்ச்சிக்காக விஜய் டிவியை பாராட்டலாம், .