Tuesday, November 17, 2009


விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு'.
இதில், முழுக்க முழுக்க சிறுவர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாட்டின் பல நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 குழந்தைகளுக்கு முதல் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.
50 சிறுவர்களுக்கும் "பெண் விடுதலை வேண்டும்', "அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்', "மெய்பொருள் காண்பதரிது', "செந்தமிழ் நாடெனும் போதினிலே' போன்ற பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் திருக்குறளின் வாக்கியங்கள் அளிக்கப்படும். போட்டியாளர்கள் இந்தத் தலைப்பை வைத்து கொண்டு தற்போது உள்ள சூழ்நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள்.
சிறுவர்களின் தமிழ் ஆற்றலை மதிப்பிட சுப வீரபாண்டியன், பேராசிரியை ப்ரவீன் சுல்தானா ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டு சிறுவர்களின் மேடை ஆளுமை, பேச்சுத்திறன், தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்று, விவாத திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சிறுவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
குழந்தைகளின் பேச்சுத் திறனை வெளிக் கொண்டு வரும் இந்த நிகழ்ச்சி (மே-10) ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகிறது.

தரணி எங்கும் தனிச்சிறப்பை பெற்று வரும் விஜய் தொலைக் காட்சியின் " தமிழ்ப பேச்சு எங்கள் மூச்சு" சுட்டிகள் - நிகழ்ச்சி பார்ப்பவர்களைப் பரவசக் கடலில் ஆழ்த்தி வருகிறது என்பது உலகெங்கும் கிடைத்து வரும் பரவலான பாராட்டுதல்களிலேயே தெரிகிறது.

அதிலும் குறிப்பாக சிங்கப்பூர் , அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சியாக கருதி மிகப்பெரும் வரவேற்பை

தந்து மகிழ்கிறார்கள்.

தமிழுக்கு அணி சேர்க்கும் விஜய் தொலைக்காட்சியின் முயற்சி சிறப்படைய

வாழ்த்துவோம்.

Saturday, November 7, 2009


http://dishtracking.blogspot.com/2008/03/vijay-tvs-talent-hunt-for-tamil-orator.html

Dish Tracking
03 March 2008

Vijay TV's talent hunt for Tamil orator starts on 2 March

Vijay TV has announced that its best Tamil orator talent hunt weekly show Aachi Thamizh Pechu Engal Moochu will start on Sunday (2 March).

The channel claims to have launched an intensive statewide hunt in Tamil Nadu for the most competent Tamil orators from across the state spanning cities such as Salem,
Coimbatore, Madurai, Trichy, Thirunelveli and Chennai.
In the audition stage, the participants were made to choose from a Tamil letter, word, or sentence as a subject and speak extempore on the chosen subject.
A panel comprising Tamil scholars, "Thamizh Kadal" Nellai Kannan and Arivumathi judged the competition. From the 6 zones, over 200 best orators were selected and
made to compete at various levels. Post elimination, 30 final contestants will be chosen and put to test in different rounds varying on skills such as story narration,
poetry recital, pattimandram, elocution, etc.
Vijay TV seems to be doing well in talk shows.

உணர்வுகள்! நிகழ்வுகள்! சிந்தனைகள்! - அ. கௌரிசங்கர்.
me2atblog.blogspot.com/2008/03/blog-post.html

Mar 3, 2008

தமிழ் பேச்சு - எங்கள் மூச்சு!

பெண்களை தொலைக்காட்சி மூன் கட்டிப்போட்டு இரவு நேரங்களில் வீட்டை ஆட்சி செய்த நெடுந்தொடர்களுக்கு மத்தியில் வித்தியாசம் காட்டியது 'Start Vijay'. 'சினிமாயில்லாத பொழுதுபோக்கு நிகழ்ச்சியா?' எனற விதிகளுக்குக் கட்டுப்படாமல 'அழகி', 'கலக்கப்போலது யாரு?', 'நீயா நானா', போன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்கு தமிழ் வடிவம் தந்தார்கள்.இந்த வரிசையில் இப்பொழுது முத்திரை பதிக்க வந்துள்ளது 'தமிழ் பேச்சு - எங்கள் மூச்சு!'. மக்களிடமுள்ள தமிழ் அறிவை மேடை ஏற்றும் முயற்சி இது. ஏற்ற தகுதியுள்ள நாடுவர்கள். திறமை படைத்த போட்டியாளர்கள்.தமிழ் அலைவரிசைகளில் தமிழைக் கொல்லும் தொகுப்பாளர்கள் மத்தியில் தமிழையே மையமாகக் கொண்டு ஒரு நிகழ்ச்சி என்ற முயற்சிக்கு பல பாராட்டுக்கள்.
உங்கள் - கௌரிசங்கர்

Thursday, November 5, 2009


பதிவுகள் உங்களுக்காக...

Wednesday, November 4, 2009

தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு
http://blog.nilavan.net

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு' தமிழை நேசிக்கும், நேசிக்க துடிக்கும் ஒவ்வொருவனும் பார்த்து ரசிக்க வேண்டிய முக்கியமான நிகழ்ச்சி ஆகும். விஜய் தொலைக்காட்சி சிறப்பான, வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தனிமுத்திரை பதித்து வருகிறது. அதன் ஒரு தமிழ் தொண்டாக தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு அமைந்துள்ளது.தமிழின் பெருமைகளையும் இலக்கியங்கள் பலவற்றின் அருமைகளையும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு இளைய சமுதாயத்தின் மூலமே அளிக்கிற பணி மிகச்சிறந்த பணியாகும். இந்நிகழ்ச்சி பேச்சாற்றலுக்கு மட்டுமல்லாமல் அப்பேச்சின் மூலம் பள்ளிப் படிப்பு முடித்தவுடன் மூட்டைகட்டி விடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் அருமையையும், அந்நூல்களைப் படிக்க வேண்டும் என்னும் ஆவலையும் நம்மிடைய ஏற்படுத்துகிறது.ஒவ்வொருவரும் இந்நிகழ்ச்சியை பாருங்கள், பரவசமடையுங்கள் ....தமிழ்ப்பால் பருகுங்கள் என உங்கள் அனைவரையும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

-------------------------------------------------------------------------------------

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு
http://tamil-valai.blogspot.com

இது என் வசனம் இல்லை… இது விஜய் தொலைக்காட்ச்சியின் ஒரு நிகழ்ச்சி. தற்சமயம் சிறுவர்களுக்குள் நடக்கும் இப்போட்டி, முன்னர் பெரியவர்களுக்கு நடத்தப்பட்டது. என்னால் முடிந்தவரையில் விடாமல் பார்ப்பேன்.
நான் பலமுறை தமிழில் பேசவேண்டும் என்று தீர்மானம் எடுத்துகொண்டதுண்டு… பலமுறை என்று சொல்லும்போதே, உங்களுக்கு புரிந்திருக்கும், இதுவரை அது செயல்படுத்த படவில்லை என்று… வேலை நேரத்தில், முழுவதும் தமிழில் பேசுவது இயலாத காரியம் என்பது உண்மை என்று ஆகியேவிட்ட நிலையில், வீட்டிலாவது தமிழில் பேசலாம் என்று முடிவு எடுப்பேன்… ஆனால் மறந்து விடுவேன் : - ). எனக்கு ஞாபக மறதி அதிகம்… என் மனைவி கண்டிப்பாக இதை ஒத்துகொள்ள மாட்டாள்… எனக்கு ஞாபகம் என்று ஒற்று இருக்கிறது என்பதையே அவளால் ஒத்துகொள்ள முடியாது. இந்த முறை என் தீர்மானம் எவ்வளவு நாள் (நேரம்) செயலில் இருக்கிறது என்று பாப்போம்…
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
-------------------------------------------------------------------------------------

http://www.saravanakumaran.com

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் "ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு" நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக ஒளிப்பரப்பான "தமிழா நீ பேசுவது தமிழா" என்ற சுற்று சுவாரஸ்யமாக இருந்தது. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் நாம் நடைமுறையில் பேசுவது போல் ஒரு சொற்றொடரை கூறுவார். அதாவது ஆங்கிலம், சமஸ்கிருதம் கலந்து. அதை போட்டியாளர் தமிழ் வார்த்தைகளால் கூற வேண்டும். நிஜமாகவே ரொம்ப கஷ்டங்க. மற்ற சுற்றுகளில் ஜொலித்தவர்கள் கூட (தமிழாசிரியர்களும்) இதில் திணறினார்கள்.
உதாரணத்திற்கு, பெட்ரோல், டிராக்டர், ரிலாக்ஸ் போன்ற வார்த்தைகளை நினைத்து பாருங்கள். நடுவர்கள் நெல்லை கண்ணன், சுப.வீரபாண்டியன் அருமையாக பேசினார்கள். நெல்லை கண்ணன் ஒரு நவீனகால இளைஞன் கூறியதாக இதை கூறினார், "தமிழுக்கு ஒரு கஷ்டம் என்றால் அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. We will fight for it"!!!. தமிழை அடிப்படையாக வைத்து அமைந்துள்ள இந்த நிகழ்ச்சிக்காக விஜய் டிவியை பாராட்டலாம், .
பதிவுகள் உங்களுக்காக.



Tuesday, October 13, 2009

விசய் தொலைக்காட்சியின் தமிழ்ப்பேச்சு


pandii durai

பண்புடன் நண்பர்களுக்கு இன்றுதான் தொலைக்காட்சி பதிவுகளை கணிணி வழி காணமுடிந்தது. விசய் டிவியின் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை கேட்க்க நேர்ந்தது. பண்புடன் நண்பர்கள் பார்த்திருப்பின் இந்நிகழ்ச்சி பற்றி கருத்துக்களை பகிர்ந்துகொள்ளாமே


தோழமையுடன் பாண்டித்துரை -
- www.pandiidurai.wordpress.com

From: "pandii durai" ...@gmail.com>
Date: Tue, 15 Apr 2008 03:42:37 -0700




http://irapeke.blogspot.com

சிறந்த இந்தியன் : துக்காராம் ஓம்பலே / Tukaram Omble (http://en.wikipedia.org/wiki/Tukaram_Omble)

சிறந்த புத்தகம் : 2666 - Roberto Bolaño

சிறந்த சினிமா (உலகம) : Curious case of Benjamin Button
(இப்படி ஒரு கதையை திரைக்கதை அமைத்து இயக்கிமுடித்தர்க்காக. http://en.wikipedia.org/wiki/The_Curious_Case_of_Benjamin_Button

சிறந்த சினிமா (இந்தியா) : A Wednessday (Hindi)
http://en.wikipedia.org/wiki/A_Wednesday

சிறந்த சினிமா (தமிழ்): சுப்ரமணிபுரம்
(வேறு சொல்லிகொல்லும்படடியான் படம் 2008 வெளியாகாததால் - yes we did consider அஞ்சாதே, பூ, ஜெயம்கொண்டான், அபியும் நானும் in the top five list. )

சிறந்த சினிமா (தமிழ் - மொழிமாற்று ): சரோஜா (Judgement night திரைபடத்தை நிஜமாகவே நன்றாக மொழிமாற்றம் செய்ததற்காக (
http://en.wikipedia.org/wiki/Judgment_Night_(film)
சிறந்த நடிகர் (சினிமா) : கமலஹாசன் - தசாவதாரம் / பார்வதி - பூ

சிறந்த தொலைக்காட்சி : மக்கள் தொலைக்காட்சி (சிறப்பு நிகழ்ச்சிகள் போட்டு பண்டிகைகளை கொண்டாடவிடாமல் செய்யாமல் இருந்ததர்க்காகவும் )

சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி : தமிழ் பேச்சு எங்கள் மூச்சு
(இப்படி ஒரு நிகழ்ச்சி பார்க்கும்படியாக வழங்கியதற்காக)


Posted by irapeke at
1:38 PM
http://rudhranv.blogspot.com

ருத்ரன்
"ரௌத்திரம் பழகு..."
நம் எல்லோரையும் அசத்திய விஜய் தொலைக்காட்சியின் ‘தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ தற்போது ‘சுட்டிகள்’ பக்கம் திரும்பியுள்ளது. அடடா, சில மழலைகளின் தமிழ் உண்மையாகவே நம்மை அதிசயிக்க வைக்கிறது.
தமிழ், தமிழகத்தில் இன்னும் சில காலத்திற்கு தாக்குப்பிடிக்கும் என்ற நம்பிக்கை கொடுத்த விஜய் டி.வி.க்கு நன்றி.

"ரௌத்திரம் பழகு..."
நம் எல்லோரையும் அசத்திய விஜய் தொலைக்காட்சியின் ‘தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ தற்போது ‘சுட்டிகள்’ பக்கம் திரும்பியுள்ளது. அடடா, சில மழலைகளின் தமிழ் உண்மையாகவே நம்மை அதிசயிக்க வைக்கிறது. தமிழ், தமிழகத்தில் இன்னும் சில காலத்திற்கு தாக்குப்பிடிக்கும் என்ற நம்பிக்கை கொடுத்த விஜய் டி.வி.க்கு நன்றி.

துக்ளக்

எழுத நெனக்கறது...நெனச்சத எழுதறது...

Thursday, November 13, 2008

முத்தமிழ் - எந்தத் திக்கில்?


உலகம் யாவையும் தாம்உள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் - அவர்
தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே.
- கவி கம்பன்
எதையோ யோசிச்சுக்கிட்டிருக்கும்போது திடீர்னு இந்த பாட்டு ஞாபகம் வந்தது. (இது பாட்டா, செய்யுளா?) இது ஞாபகம் வந்ததும் கூடவே புலவர் கீரனோட ஞாபகமும் வந்தது.
உடுமலை அரசினர் மேல் நிலைப்பள்ளியில படிக்கும்போது, தி.சு.செந்தில் ஆறுமுகம்னு ஒரு ஆசிரியர் இருந்தாரு. இவர் திரு. சுந்தர ஓதுவா மூர்த்தி சுவாமிகளோட மகன். வருஷத்துக்கு ஒருமுறை இலக்கிய மன்றம் சார்புல "முத்தமிழ் விழா"ன்னு 9 நாளைக்கு நடத்துவாரு. இயல், இசை, நாடகம் ஒண்ணொண்ணுக்கும் 3 நாள். கூடவே வாரியார் சுவாமிகள், புலவர் கீரன், திருக்குறளார் முனுசாமி இவுங்களோட சொற்பொழிவுகளும் தினமும் இருக்கும். முனுசாமி அய்யாவோட சொல்லாடலை விட அவருடைய குரல் வளமும், ஏற்ற இறக்கங்களோட பேசுறதும் கேக்க ரொம்ப சுகமா இருக்கும். வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுன்னா மொதல் பத்து வரிசை சின்னப் பசங்களுக்குதான். கதை சொல்லிக்கிட்டே வரும்போது திடீர்னு எதாவது கேள்வி கேட்டு டக்குனு பதில் சொல்ற பையனுக்கோ பொண்ணுக்கோ கந்தரனுபூதி, கந்தரலங்காரம்னு ஒரு சின்ன புத்தகத்தை பரிசாக் குடுப்பாரு. ரொம்ப சுலபமான கேள்விகள்தான். சின்னப் பசங்க கிட்ட ஒரு ஈடுபாடு உண்டாக்கணும்கற நோக்கத்துல 3 மணி நேர சொற்பொழிவுக்குள்ள ஒரு 40 பரிசுகளாவது பட்டுவாடா ஆயிரும். நடு நடுவுல துணுக்குகள் சொல்றதும், அதுக்கு அவுரே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கரதும் தனி அழகு. அவரோட "கைத்தல நிறைகனி....." உலகப் புகழ். தமிழ் மிமிக்ரி கலைஞர்கள் எல்லாம் முதல்ல கத்துகிற குரல் இவரோடதாத்தான் இருக்கும்.
அப்பறம் புலவர் கீரன். தன்னுடைய ஊனத்தைக் கூட பொருட்படுத்தாம 3 மணி நேரம் உக்காந்த இடத்துல கணீர்னு "உலகம் யாவையும்..." சொல்லி ராமாயணமோ, வில்லிபாரதமோ சொன்னார்னா, அந்தந்த பாத்திரங்களே நம்ம முன்னாடி நின்னு பேசர மாதிரி இருக்கும். திரும்ப திரும்ப படித்த, கேட்ட கதைகளை ஒவ்வொரு முறையும் வித்தியாசமான செய்திகளோடயும், சிந்தனைகளோடயும் கேக்கறவங்களை கட்டிப் போடற மாதிரி சொல்றது புலவர் கீரனுக்கு இணை அவர்தான். நடுவுல சொல்ற கிச்சு கிச்சு மூட்டற குட்டிக் கதைகளும் சுவாரசியமா இருக்கும்.
எல்லாத்துக்கும் மகுடம் வெச்சது மாதிரி இருப்பது R.S.மனோகரின் நாடகங்கள். எங்க பள்ளிக்குள்ள இருக்கற கலா மண்டபத்திலும், GVG கலையரங்கத்திலும் மனோகர் நாடகங்களை பார்ப்பதே ஒரு சுகானுபவம். "இலங்கேஸ்வரன்" நாடகத்தை முதல் முதல்ல "ட்ராமாஸ்கோப்" முறையில கலா மண்டபம் மாதிரியான சுமாரான இடத்துலயே அதை அட்டகாசமா நடத்தி, வழக்கத்துக்கு மாறா பள்ளியிலயே தொடர்ந்து 10 நாள் நடத்தி அசத்தியவர் அவர்.
இப்ப இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, 90களுக்குப் பிறகு இந்த மாதிரி நிகழ்ச்சிகள் ரொம்பவே குறைஞ்சுக்கிட்டே வந்து, இப்பல்லாம் நடக்கறதே இல்லன்னு கேள்விப்பட்டபோது ரொம்ப சங்கடமா இருந்தது. அதவிட சங்கடம் இதெல்லாம் நேரத்தை வீணாக்கற விஷயம்ங்கற மாதிரி பேசினது.
செந்தில் ஆறுமுகம் மாதிரியான ஆசிரியர்களும் இப்ப இல்ல. இதையெல்லாம் ரசிக்கறதுக்கு மக்களும் இல்ல. இப்ப மக்கள் பாத்து ரசிக்கற ஒரே மேடை 21 இன்ச் டி.வி பொட்டிதான். காலைல எழுந்ததிலிருந்து ராத்திரி தூங்கப் போகற வரைக்கும் மெகாத்தொடர்கள்ங்கற பேர்ல மக்களை மக்கிப் போக வெக்கற அரைவேக்காடு நிகழ்ச்சிகள்தான். எங்க பகல்ல பாக்காம விட்டுப் போச்சுன்ன என்ன பண்றதுன்னு ராத்திரி ஒரு ரௌண்ட் மொதல்லேருந்து திரும்பப் போட்டு வேற படுத்தறாங்க. இதயெல்லாம் பாக்க சகிக்காதுன்னுதான் மேல சொன்னவங்கள்லாம் மேலயே போய் சேந்துட்டாங்க. அங்க இருக்கறவங்க பாக்கியசாலிக.
மங்காத தமிழ்னு எட்டுத் திக்கும் கொட்டச் சொன்னான் ஒரு போக்கத்த கவி. நாம எந்தத் திக்குக்கும் போல. நம்ம வீட்டு சாக்கடையிலயே கொட்டீட்டு, பீட்சா தருவிச்சு சாப்டுட்டு, மினரல் வாட்டர் குடிச்சுட்டு குப்பறப் படுத்து குறட்டை விட்டாச்சு. அட போங்கப்பா.....


என்ன நெனைக்கிறாங்கன்னா..:
பழமைபேசி said...

நானே இன்னைக்கு நொந்து போயிருக்கேன்... நீங்க வேற, வெந்த புண்ல மொளகாப் பொடியத் தூவுறீங்ளே?!நனவோடை நல்லா இருக்கு...
November 14, 2008 7:58 AM

Mahesh said...
மொளகா போடறதெல்லாம் இல்லீங்க... நான் ஒண்ணும் தமிழ் வெறியன் எல்லாம் கிடையாது. எல்லா மதமும் சம்மதம்கற மாதிரி எல்லா மொழிகளையும் தாய்மொழிதான். அதுக்காக ஒரு மொழியை, அதுவும் நாம பிறந்து, நினைவு தெரிஞ்சு பேச ஆரம்பிச்ச முதல் மொழியை கேவலப்படுத்தாம இருக்கலாம். பல மொழிகளை தெரிஞ்சுக்கறதால இருக்கற நன்மைகளை அனுபவ பூர்வமா உணர்ந்தவன்ங்கற முறைல சொல்றேன்.
November 14, 2008 4:44 PM

ஆயில்யன் said...
தமிழ் - கல்லூரிகளில் மாணவர்களின் கவனம்பெற்று இலக்கியம் சமயங்களில் ஆழ்ந்து எழுந்தவர்கள் பின்னாளில் பெரிய பெரிய சொற்பொழிவாளர்களாக உருவாகினர் - 20 வருடங்களுக்கு முன்பு!இன்றைய நிலையில் அது போன்றதொரு வாய்ப்புக்களோ அல்லது சூழ்நிலைகளோ மாணவர்களுக்கு சுத்தமாக இல்லை இலக்கியங்கள் படிக்கவும் குறைந்த பட்சம் பார்க்கவும் கூட நூலகங்களை நாடுவது அறவே மருகிப்போய்விட்டது!

November 14, 2008 4:46 PM

Mahesh said...
கருத்துக்கு நன்றி ஆயில்யன்... கல்லூரிகளில் தமிழின் மீது கவனமா? சட்டக் கல்லூரி மாணவர்களோட கவனம் எது மேல இருந்துது பாத்தீங்கள்ல? விஜய் டிவில வர "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" ஒரு நம்பிக்கைக் கீற்று.
November 14, 2008 5:15 PM






http://enpoems.blogspot.com

my thoughts da machi....
[என்னுடன் வா ப்ளாக் வரைக்கும் என் ப்ளாக்கை பார் என்னை பிடிக்கும்:]

Friday, July 11, 2008



சம்பளம் எப்படி வந்துச்சு?

சம்பா என்றால் அரிசிஅளம் என்றால் உப்பு. முந்தைய காலத்தில் மக்கள் அரிசி மற்றும் உப்புக்காக தான் வேலை செய்தார்கள். ஆகவே தான் அதற்கு பெயர் சம்பளம் என்று வந்தது.ம்ம்ம்... ஆஹா இன்னிக்கு யாராய்யா அரிசிக்கும் உப்புக்கும் வேலை பாக்க போறா? அவ்வ்வ்...:))

(இது, விஜய் டீவியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை பார்த்தபிறகு வந்த பாதிப்பு இல்லங்க...):)



Zephyr Friends
Friends are like breeze
Hats off ?!?
Nov 23, 2008


Hats off சொல்ரது ரொம்ப சாதாரணமாகி போச்சு. நான் உன் கலைக்காக தலை வணங்குகிறேன்! இது நல்லா இருக்கா? இல்ல நான் உன் கலைக்காக என் தொப்பிய என் சொட்ட தலையில இருந்து எடுக்கிறேன்.. இது நல்லா இருக்கா? ஒரே காமடி தான் போங்க.
எல்லா நடனப்போட்டியிலயும் இந்த சொல் புலக்கத்தில் இருக்கு. நான் நினைப்பது, விஜய் தொலைக்காட்சியில் வரும் "தமிழ் எங்கள் பேச்சு; தமிழ் எங்கள் மூச்சு"ஐ மட்டும் இன்னும் ஈ அடிச்சான் காப்பி அடிக்காம இருக்காங்க.


Posted by Princess at Sunday, November 23, 2008


Thursday, May 15, 2008

கடவுளை நம்பினோர், கைவிடப் படார்

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு எனும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒருவரின் பேச்சு...

மீசை ஏன் முளைக்கிறதுஆணுக்குத் தெரியாது!பெண்மை ஏன் பூக்கிறதுபெண்ணுக்குத் தெரியாது!பல் ஏன் விழுகிறதுமழலைக்குத் தெரியாது!மரணம் ஏன் அழைக்கிறதுமுதுமைக்குத் தெரியாது!மனிதன் ஏன் அழுகிறான்கடவுளுக்குத் தெரியாது!இப்பாடலில், குறிப்பாக கடைசி வரி முதலில் பொருளற்றதாக எனக்கு தோன்றினாலும், நன்கு சிந்தித்தபின் அதன் ஆழ்ந்த அர்த்தம் புரிந்தது. நம்மை காப்பாற்ற கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கிறார். இதை உணராமல் மனிதன் சிறு சிறு நிகழ்ச்சிகளுக்குக் கூட அழுகிறான்.என் அனுபவத்தில் இப்போது நாம் அழுது புலம்பிக் கொண்டிருக்கும் காரியம் பின் நாட்களில் மிக சிறியதாயும் வேடிக்கையாயும் தோன்றும். அப்போது, "இந்த சிறு நிகழ்விற்கா இவ்வளவு கவலைப்பட்டோம்?" என்றாகிவிடும். இது முன்பே தெரிந்திருந்தால் மனநிம்மதியாவது மிஞ்சியிருக்கும்.ஆகவே என்ன நடந்தாலும் "கடவுளை நம்பினோர், கைவிடப் படார்".பைபிலில் இஸ்ரயேல் மக்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் கடவுளை நோக்கி மன்றாடும் போது, அவர் தரும் பதில்கள் அத்தனயும் கேலிக்கிடமாகவும், முட்டாள்தனமாகவும் தான் தோன்றும்.எடுத்துக்காட்டாக் பார்வோன் அரசன் இஸ்ரயேலரை அடிமப்படுத்துவதற்காக அவர்களை துரத்துகிறான். ஒரு பக்கம் கடல், மறுபக்கம் எதிரி நாட்டுப் படைகள், மோசே கடவுளை நோக்கி மணன்றாடுகிறார், அப்போது மோசேயோ அல்லது அம் மக்களோ என்ன எதிர்பார்த்திருப்பர்? கடவுள் கடலைக் கடக்க ஒரு பாலமோ அது ஒரு கப்பலோ உருவாக்குவார் என்று எண்ணியிருப்பர். ஆனால் கடவுளோ கோலால் கடலை அடிக்கச் சொல்கிறார். எந்த முட்டாளும் இதைச் செய்ய மாட்டான். எதிரி நாடு படையுடன் வரும்போது எவனும் கடலை அடித்து கொண்டிருக்கமாட்டான்… ஆனால் நடந்தது என்ன? மோசேயின் நம்பிக்கையால் கடல் பிளந்தது… அவர்கள் அதை எளிதாக கடந்து சென்றனர். அதே கடலே எதிரிகளுக்கு எமனாகவும் அமைந்தது. எதிரிகள் கடக்கும் போது அது அவர்கள் மேல் விழுந்து அவர்களை அழித்தது…இதேபோல் எரிக்கோ மதிலை கடந்தால் தான் வாழ்வு எனும் நிலையில் அதை இடிக்க கடவுள் கொடுத்த வழி, எக்காளம் ஊதி அதை மும்முறை சுற்றி வருவது… இதுவும் பைத்தியக்காரத்தனமானது தான்… ஆனால் அம் மதில் இடிந்து விழுந்தது…எப்போதுமே வழியே இல்லை, எனும் நிலையில் தான் கடவுளின் அருள் மிகுதியாய் விளங்கும். இதற்கு என் வாழ்வில் பல உதாரணங்களை பார்த்திருக்கிறேன்.கடவுளை மூடத்தனமாக நம்பி, உன் பணியை ஒழுங்காக செய்தால் நிச்சயம் வெற்றி உனதே...
Posted by Jayarathina Madharasan at 12:05 AM


Monday, June 01, 2009
சில பெண் குரல்கள் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, ஷேக் ஹசினா, சந்தா கோச்சர், மீரா குமார் போன்றோரின் கருத்துக் குரலைப் பற்றி எழுதுவேன் என்று நினைத்து வந்தவர்களுக்கு முதற்கண் என் மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சினிமா, சினிமா, சினிமா தான் இந்த பதிவு. அதுவும் முழுக்க முழுக்க பெண் குரல்களில் வெளி வந்துள்ள பாடல்களைப் பற்றி. அதற்காக "உயர்ந்த மனிதனின்" நாளை "இந்த வேளை பார்த்து", "அரியது அரியது" போன்ற பாடல்களைப் பற்றியெல்லாம் எழுதுவேன் என்றும் நினைக்க வேண்டாம். அதற்கெல்லாம் எனக்கு நுண்ணறிவு பத்தாது. அந்த பாடல்களெல்லாம் "காலத்தை வென்ற சிறப்புடையவை" என்று சொல்வதோடு நிறுத்திக் கொண்டால் இசையில் சிறந்த நுண்ணறிவாளர்கள் வாயில் விழுவதிலிருந்து தப்பித்துக் கொள்வேன்.
இதுவரை 38 முறை தேசிய அளவில் "சிறந்த பிண்ணனி பாடகி" விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழர் பெருமை பட வேண்டிய விஷயம், தமிழ் பாடலுக்காக (ஊ ல லா தமிழ் பாடலா எனக் கேட்பவர்கள் தமிழ் படங்களில் வந்த பாடலுக்காக எனக் கொள்ளலாம்)
இது வரை 12 முறை இந்து விருது வழங்கப்பட்டுள்ளது. பி. சுசிலா, கே. பி. சுந்தராம்பாள், வாணி ஜெயராம், எஸ். ஜானகி, சித்ரா, சுவர்ணலதா, பவதாரிணி, சாதனா சர்கம் என மொத்தம் எட்டு பேருக்கு இந்த விருது தமிழ் பாடலுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் சாதனா சர்கம் அவர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் தமிழில் பேசவும் தெரிந்தவர்கள். (சாதனா சர்கம் சொல்லும் "வணக்கம் தமில் நாடு" எல்லாம் இதில் கணக்கில் கிடையாது)இப்படியாக தமிழ் பாடகிகளுக்கு அல்லது தமிழில் பாடும் பாடகிகளுக்கு இந்தியளவில் சிறந்த அங்கீகாரம் இருந்து வருகிறது.
சமீபத்தில் என்னுடைய i-podல் 1998க்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த தமிழில் முழுக்க முழுக்க பெண் குரலில் வந்த சில பாடல்களைத் தொகுத்தேன்.
அவை பின்வருவன
1. எனக்கு பிடித்த பாடல் - ஜுலி கணபதி - ஷ்ரேயா கோஷால்2. காதல் வானொலி - ஆல்பம் - சுஜாதா3. தையத்தா தையத்தா - திருட்டுப் பயலே - சாதனா சர்கம்4. யாரிடம் சொல்வேன் - ரைட்டா தப்பா - ஹரிணி5. ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால் - சின்மயி6. மழை நின்ற பின்பும் ஈரம் - ராமன் தேடிய சீதை - கல்யாணி7. மருதாணி - சக்கரக்கட்டி - மதுஸ்ரீ8. ஆலங்குயில் - பார்த்திபன் கனவு - ஹரிணி9. ஒவ்வொரு பூக்களுமே - ஆட்டோகிராஃப் - சித்ரா
இந்த தொகுப்பில் சமீபத்தில் மேலும் இரண்டு பாடல்களைச் சேர்த்துள்ளேன்.
1. கண்ணில் தாகம் - அச்சமுண்டு அச்சமுண்டு - சௌமியா2. கூட வருவியா - வால்மீகி - பேலா ஷிண்டே
இதில் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால் நான் எப்பொழுதும் கேட்கும் திரு. இளையராஜா இசையமைத்த பாடல்கள் இரண்டு. ஆஸ்கார் நாயகன் திரு. ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் இரண்டு. திரு. வித்யாசாகர் இசையமைத்த பாடல்கள் இரண்டு. திரு. பரத்வாஜ் அவர்கள் இசையமைத்த பாடல்கள் இரண்டு. திரு. கார்த்திக் ராஜா அவர்கள் இசையமைத்த பாடல்கள் மூன்று. கார்த்திக் ராஜா மிகக் குறைவான படங்களுக்கே இசையமைத்திருக்கிறார் என்றாலும் சொல்லும் படியான சில நல்ல பாடல்களை வழங்கியிருக்கிறார்.
எனக்குத் தெரிந்து நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் ஒன்று "யாரிடம் சொல்வேன்". அநேகமாக நிறைய பேர் இந்த பாடலைக் கேட்டிருக்க மாட்டார்கள். அதே போல் சமீபத்தில் கர்நாடக இசைப் பாடகி திருமதி. சௌமியா பாடியுள்ள கண்ணில் தாகம் என்னும் பாடல் மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்த வருடம் மீண்டும் அந்த "சிறந்த பிண்ணனி பாடகி" விருது ஒரு தமிழ் பாடலுக்கு கிடைக்கலாம் என நினைக்கிறேன்.
மேலும் இந்த தொகுப்பில் இருக்கும் பாடகிகளில் பலர் (எஸ். ஜானகி, பி. சுசிலா உட்பட) ஆல் இந்தியா ரேடியோ, சா ரி க ம பா போன்ற வெகுஜன ஊடக நிகழ்ச்சிகள் மூலமாக அறிமுகமானவர்களே.
இப்பொழுது தமிழ் தொலைக்காட்சிகளில் "சூப்பர் சிங்கர்", "டாப் சிங்கர்", "ராகமாலிகா" என பல போட்டி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இப்படியாக நிறைய பெண் குரல்கள் நமக்கு கிடைக்கின்றனர். செவிகளுக்கு சுவை படைப்பதில் இவர்களை மிஞ்சியவர்கள் வேரெவருமில்லை.
ஒரு வேண்டுகோள்:தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பெயர் வைப்பவர்கள் "சூப்பர் சிங்கர்", "டாப் சிங்கர்" என பெயர் வைப்பதற்கு பதிலாக "தமிழ் பாட்டும் மெட்டும்", "பாட்டுப் பாடவா" எனப் பெயர் வைக்க துவங்கலாம். ("ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" என நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு ஒரு வணக்கம்!!)
--கோ.கணேஷ் @ Monday, June 01, 2009

Monday, October 12, 2009

http://ammanchi.blogspot.com

அம்மாஞ்சி

[எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்]

அமுதுக்கும் தமிழ் என்று பெயர்!


மற்ற டிவிகளை ஒப்பிடும் போது விஜய் டிவியில் பல உருப்படியான, சிந்திக்க வைக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அனேகமாக வாரத்தில் ஒரு நாலு நாட்கள் யாராவது சோபாவில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள். இதை மாதிரி டாக் ஷோ நடத்த ரொம்பவே தில்லு வேணும்.
முதலில் சரியான நிகழ்ச்சி நடத்துனர்(Anchor) வேணும்.
மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சியை வடிவமைக்க தெரியனும்.
மூணாவது, நல்ல ஸ்டூடியோ தளம் அமையனும். ஒரு சில டிவிகள் வாய்கால் ஓரங்களில் எல்லாம் பேட்டி எடுக்கிறார்கள். பேக்ரவுண்டில் ஒருத்தர் சொம்பை தூக்கி கொண்டு நமக்கு தரிசனம் தருகிறார்.
இல்லாட்டி பொதிகையில் ஒரு காலத்தில் வந்த செவ்வாய் கிழமை நாடகம் மாதிரி ஆகி விடும். :)
"தமிழ் எங்கள் பேச்சு!" என ஒரு நிகழ்ச்சி நடந்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக தமிழகத்தின் தமிழ் ஆர்வலர்களை வடிகட்டி இப்போ நிகழ்ச்சி களை கட்ட தொடங்கி விட்டது. வெகு காலத்துக்கு பிறகு இனிய தமிழை அதுவும் தனியார் டிவியில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. போட்டியில் பங்கு பெறுபவர்களும் சளைத்தவர்களாக தெரியவில்லை. கவிதை சுற்று, எதுகை மோனை சுற்று என தெள்ளமுதாய் தமிழ் பிரவாகமெடுத்து வருகிறது. ஐந்து நிமிடங்களுக்கு மேல் இப்போதெல்லாம் எந்தவொரு நிகழ்ச்சியையும் பாக்க முடியாத நிலையில், இது போன்ற நிகழ்ச்சிகள் அத்தி பூத்தாற் போல வருவது மனதுக்கு இதமாக உள்ளது.
பல புதிய தமிழ் சொற்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் முன் இலக்கியமோ, பின் இலக்கியமோ என்னை மாதிரி பட்ஜட் பத்மநாபனுக்கும் புரியும்படி பேசினார்கள்! எனபது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம். அதுவும் தமிழ்மணத்துக்கு ஒவ்வாத சொற்கள் அறவே இல்லாமல் பின்னிலக்கியமும் பேசபடுகிறது. ஒரு வேளை *** தான் பின்னிலக்கியமோ? என்ற எனது மாயை விலகியது. நிகழ்ச்சியை வெகு சுவாரசியமாக சின்ன சின்ன தகவல்களுடன் நெல்லை கண்ணன் கொண்டு செல்லும் அழகே அழகு. நிறை குடம் என்றும் தளும்புவதில்லை.
விஜய் டிவியின் கிரியேட்டிவ் டீமுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நேரம் இருந்தால் நீங்களும் கண்டு களியுங்கள்.
திருவாய் மலர்ந்தது அம்பி @
5:33 PM

At Tue Jul 22, 06:10:00 PM, பரிசல்காரன் said…
அது தினமுமா வருது? இல்லையே?தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகிறது. அதன் மறு ஒளிபரப்பு திங்கள் இரவு 10 மணிக்கு வருகிறது. ஒவ்வொரு சுற்றுக்கும் நெல்லை கண்ணனுடன் ஒவ்வொரு தமிழறிஞர்கள் நடுவர்களாகப் பங்குபெறுகிறார்கள். அந்த வகையில் நெல்லை கண்ணனுடன் அறிவுமதி, நடிகர் சிவகுமார், நாஞ்சில் சம்பத், சுப.வீரபாண்டியன் (சன் டி.வி. வீரபாண்டியன் அல்ல!) என்ற வகையிலே இப்போது கவிஞர் விவேகாவும், சிநேகனும் நடுவர்களாக தமிழ்க்கடலுடன் அமர்ந்திருக்கிறார்கள். (யார் பேராவது விட்டுப் போச்சா?) இந்த நிகழ்ச்சியின் விளம்பரம் வந்த நாள் தொட்டு தவறாமல் பார்த்து வருகிறேன்!நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!


At Tue Jul 22, 06:17:00 PM, ambi said…
வாங்க பரிசல், நீங்க தான் முத போணி. //அது தினமுமா வருது? இல்லையே?//விஜய் டிவிகாரங்க மறு மறு ஒளிபரப்பராங்களா, அதான் கொஞ்சம் குழப்பமாயிட்டேன். :)அந்த நிகழ்ச்சிய வெச்சு பதிவு போட ஏதாவது மேட்டர் (விஷயம்) கிடைச்சதா பரிசல்? :p


At Tue Jul 22, 07:50:00 PM, தமிழன்... said…
எனக்கும் விஜய் டிவிதான் நல்லாருக்குன்னு படுது நிகழ்ச்சிகளை வச்சுதான் சொல்றேன்...


நன்றி :))

At Tue Jul 22, 08:58:00 PM, rapp said…
நான் இப்போ கொஞ்சம் நாளாகத் தான் பாக்கறேண்ணே, நெஜமாவே ரொம்ப நல்லாருக்கும் :):):)


At Tue Jul 22, 09:36:00 PM, ச்சின்னப் பையன் said…
நான் பாத்ததேயில்லீங்க... யூட்யூப்லே கிடைக்குதான்னு பாக்கறேன்...


At Tue Jul 22, 10:10:00 PM, பரிசல்காரன் said…
அடப்பாவிகளா.. இந்த நிகழ்ச்சியப் பாக்காத ஆளுகளும் இருக்காங்களா??இத வெச்சு ஒரு பதிவத் தட்டீர வேண்டியதுதான்!!சிக்கீட்டாய்ங்கள்ல??


At Wed Jul 23, 09:05:00 AM, தமிழ் பிரியன் said…
நல்ல நிகழ்ச்சி போலத் தெரிகின்றது. ஆனால் இங்கு பார்க்கும் வாய்ப்பு இல்லை....
http://m-valarpirai.blogspot.com

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!

Monday, March 2, 2009



கிராமத்து பூங்குயிலோ !


~கிராமத்து பூங்குயிலோ !
நகர்புறத்து ரெட்டை சடையோ !
மாநகர நவநாகரீக பெண்ணோ !
தாவணியோ ! சுடிதாரோ ! மாடர்ன் டிரஸ்ஸோ !
பத்தாம் வகுப்பு தாண்டியிருப்பாளோ !
இல்லை பெயருக்கு ஒரு பட்டம் வாங்கி இருப்பாளோ !
பழ்கலைகழக முதல் மாணவியோ !
இல்லை என்னை போல் பத்தோடு பதினொன்னோ !
பாரதி கண்ட புதுமைப் பெண்ணோ !
இல்லை அதிர்ந்த பேசவே அஞ்சுபவளோ !
அமெரிக்கா போய்வந்தவளோ !
இல்லை அடுத்த தெருவை தாண்டாதவளோ !
களை எடுப்பவளோ! நாத்து நடுபவளோ !
பாடம் சொல்லும் ஆசிரியையோ !
கடமை தவறா அரசு அலுவலரோ !
கண்ணியம் காக்கும் காவல்துறை அதிகாரியோ !
வழக்குகளில் ஜொலிக்கும் வழக்கறிஞறோ !
மருந்து எழுதும் மருத்துவரோ !
மருந்து கொடுக்கும் செவிலியோ !
மென்பொருளாலியோ !
பத்திரிக்கைகாரியோ !
தனியார் துறை ஊழியரோ !
இல்லை வேலைக்கு அனுப்பாத வீட்டின் செல்லப் பொண்ணோ !
வெட்டிகதை பேசும் வீட்டு சோம்பேறியோ !
இல்லை குடும்பம் காக்கும் குலமகளோ !
உலக அறிவு அறிந்தவளோ !
இல்லை உள்ளூர் கதை மட்டும் தெரிந்தவளோ !
சமையல் அறிவாளோ !
இல்லை சமையல் புத்தகம் வாங்கிவருவாளோ !
வீட்டு வேலை பாதியாவது செய்வாளோ !
இல்லை ரெண்டு வேலைக்காரி கேட்பாளோ !
சிக்கன் சாப்பிடுவாளோ
இல்லை சுத்த சைவம் என்பாளோ !
நல்ல தமிழ் கதைப்பாளோ !
இல்லை தமிங்கிலிஸ் பேசுவாளோ !
சீரியலுக்கு அடிமையோ !
இல்லை Fashin Tv பார்பவளோ !
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு பார்பாளோ !
இல்லை மானாட மயிலாட மட்டும் தானோ !
NDTV , சன் நியுஸ் கேட்பாளோ ,
இல்லை செய்திவாசிக்கிறவ நெக்லஸ் நல்லாயிருக்கு என்பாளோ !விளையாட்டு வீராங்கணையோ !
இல்லை பல்லாங்குழி நல்லா விளையாடுவேன் என்பாளோ ! !
கிரிக்கெட்டு பார்பாளோ !
இல்லை அதெல்லாம் எனக்கு பிடிக்காது என்பாளோ !
தமிழ் சினிமா ரசிப்பாளோ !
"மிரட்டல் அடி" ரசிகையோ !
இல்லை டாம் குர்ஸ், ஹிருத்திக் ரோசன் தான் என் hero என்பாளோ !
பாலா, ராதாமோகன் பிடிக்குமோ !
இல்லை ஸ்டிபன் spel burg என்பாளோ !
இளையராஜா ,ரஹ்மான் இசைப்பிரியரோ !
இல்லை britney spears தான் என் favortie என்பாளோ !
முகத்துக்கு பயித்த மாவு, உடம்புக்கு மஞ்சள் என்பாளோ !
இல்லை பியூட்டி பார்லர் போவாளோ !
தங்க நகை அடிக்கடி வேண்டும் என்பாளோ !
இல்லை என் புன்னகை மட்டும் போதும் என்பாளோ !
கம்யூட்டர் அறிந்தவளோ !
இல்லை இதில் சன் tv வரும்மானு கேட்பவளோ !
பிரபல பதிவரோ ! பின்னோட்டம் போடுபவளோ !
இல்லை பதிவென்றால் என்ன என்பாளோ !
புத்தகப் புழுவோ !
இல்லை புத்தகம் வாங்கி ஏன் செலவு செய்கிறீங்க என்பாளோ !குமுதம்,விகடனோ !
இல்லை femina , outlook படிப்பவளோ !
சிகரட்டு பிடிப்பாளோ !
சீட்டி அடிப்பாளோ !
நானும் குடிகாரன்னு சீன் போட நண்பன் பார்ட்டிக்கு
1/2 பீர் குடிக்க நான் செல்ல
எனக்கு ஒரு ஃபுல் வேணும்பாளோ !
மாமியார் மருமகள் சண்டையிலே
என்னை அம்பயர் ஆக்கிஅம்மாவுக்கு அவுட் குடுக்க சொல்லுவாளோ !
நான் அவளுக்கு பிடித்த மாதிரி மாறுவேனா ? !
இல்லை அவள் எனக்கு பிடித்த மாதிரி மாறுவாளா ?
இல்லை இருவருக்கு பிடித்ததும் ஒன்றாக இருக்குமோ ? !
அகம், புறம் இதில் ஒன்று அழகாயிருந்தால் அழகி ..
ரெண்டுமே அழகாய் இருந்தால் பேரழகி !
அவள் அழகியோ இல்லை பேரழகியோ ?
என்று நான் கனவுகளில் நனைந்து கொண்டிருக்கும் போது ....
கணீரெண்று என்கிருந்தோ ஒலித்தது ஒரு குரல் !
" அதிக கற்பனை வேண்டாம் மகனே ! கொஞ்சம் அடக்கி வாசி ! :) "~


திரைப்படம்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், பத்திரிக்கைகள் என ஊடகங்களில் நான்...Tuesday, August 19, 2008

எத்தனையோ தமிழ் தொலைக்காட்சிகள் வசதியிருந்தும் வாய்ப்பிருந்தும் செய்யாததை, விஜய் டிவி தொடர்ந்து செய்து கொண்டிருக்க்கிறது. நடுவராக நெல்லை கண்ணன். நெல்லை கண்ணன் காங்கிரஸ்வாதியாக இருந்தாலும் வித்தியாசமானவர். நல்ல பேச்சாற்றல் மிக்கவர்.
பட்டிமன்ற ராஜாவை சிறப்பு விருந்தினராக கொண்டு புதிய கால தொடர் தொடங்கியிருக்கிறது.அரட்டை அரங்க திடீர் பேச்சாளர்களை கண்டு ஓடும் நிலையில் இந்த நிகழ்ச்சி உண்மையிலே வரம் தான்.இந்த தொகுப்பில் செல்பேசி, அறிவியல் வளர்ச்சியின் தாக்கம், இன்றைய இளைஞர்களின் நாட்டுப்பற்று மற்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என வெவ்வேறு தலைப்புகளில் அசத்தி விட்டார்கள் பேசியவர்கள்.
ராணுவ வீரனின் மரணம் தியாகம் பெரிய விசயமில்லை என தவறாக பொருள் படும் படி பேசியவரை ஒரு ஆசிரியராக கண்டிப்புடன் திருத்தி (ஆச்சர்யம்: பேசியவரும் ஆசிரியர் தான்) மேடை பேச்சுக்கு வேண்டிய கவனத்தை உணர்த்தினார் நெல்லை கண்ணன்.அதே வேளையில் நடந்த விசயங்களை மேற்கோள் காட்டுகையில் உள்ள திரிதலையும் சுட்டிக்காட்டினார்.அறிவியல் வளர்ச்சியின் தாக்கம் பற்றி பேசியவர் உலக அரசியலயையும் தொட்டு பேசினார்.
செல்லப் பையனும் குட்டி பையனும் துணுக்கு அருமை.அதிகமாக உணர்ச்சி வச்சபட்டதானலையோ என்னவோ எதிர்வாதம் செய்தவரை எள்ளல் செய்தார். தவிர்த்திருக்கலாம். பேசியவரின் ஆளுமையும், பேச்சு நடையும், நினைபபாற்றலும் வைகோவை ஞாபக படுத்தியது. .தமிழ் ஆர்வம் உள்ள எவரும் காண வேண்டிய நிகழ்ச்சி இது. கண்டிப்பாக பாருங்கள்.இந்த நிகழ்ச்சி நீண்ட காலம் தொடர வேண்டும்


ஒரு நிமிடம் இதை வாசியுங்கள்

vadivelan1979 24 Jun 2008, 13:24 +05.500
நண்பர்களே வணக்கம்

நண்பர்கள் யாரும் எனக்கு தெரிந்தவரை நான் உள்பட தமிழில் மென்புத்தகங்கள் வழங்கவில்லை தமிழில் வழங்கினால் தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே போல் நண்பர்கள் அனைவரும் வார இறுதி நாள் அன்று காலை ஒன்பது மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு அனைவரும் பார்த்து விழிப்படைய வேண்டிய நிகழ்ச்சி.

http://www.ularal.com/

ulagam 8:53 pm on May 28, 2009 | 4 Permalink | Reply
Tags: சிறுமி, சிறுவர், தமிழ் (41), ஸ்பெல்லிங் பீ
”ஸ்பெல்லிங் பீ” என்ற போட்டியில் இந்திய-அமெரிக்க சிறுமி முதலிடம் பெற்றுள்ளார். அமெரிக்கர்கள் ஆங்கிலத்தினை வளர்க்க இது மாதிரியான நிகழ்ச்சியினை நடத்துகிறார்கள். தமிழில் இந்த மாதிரியான நிகழ்ச்சி எந்த ஒரு தொலைக்காட்சி நடத்தினால் எவ்வாறு இருக்கும்?

1. சிறுவர் / சிறுமிகள் தமிழ் சொற்களை நன்கு கற்பார்கள்.
2. சிறுவர் / சிறுமிகளிடம் தமிழ் மொழியின் மேல் உள்ள ஆர்வம் மென்மேலும் வளரும்.
3. தமிழ் தெரிந்தால் பேரும் புகழும் வாங்கலாம் என்ற என்ற எண்ணம் அவர்களுக்கு வரும்.


yemkay 12:01 am on May 29, 2009 Permalink | Reply

விசய் டிவியில் ”தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு” என்று ஒரு நிகழ்ச்சி வருகிறது

http://thamizh.shreedharan.com

Sunday, August 03, 2008


பிரிந்து இருந்தால் தான் ஒரு பொருளின் மகிமை புரியும் ன்று சொல்வார்கள். அதை போல தான் என் தாய்மொழி தமிழை பற்றி சிங்கப்பூருக்கு சென்று நான் அறியவேண்டும் என்று இருந்திருக்கிறது என்று கருதுகிறேன். எனவே, இந்நாள் முதல் தமிழ் பற்றிய எனது அனைத்து கருத்துக்களும், என்னுடைய இந்த வலைபக்கத்தில் தமிழில் தான் எழுத போகிறேன். இது இந்த ஆகஸ்ட் பதினைந்திலிருந்து நான் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி.

சரி, இன்றைய பதிவுக்கு செல்வோம்...

இன்று, நான் சில அறிய கருத்துக்களை கேட்டேன்...'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில். நான் முன்பு கூறி இருந்ததுபொல் நான் அந்நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அதில் சபரிமாலா கூறிய ஒரு வரி, மனதை தொட்டது...அது: என் தமிழ் நாட்டில், தொண்டினால், தங்கம் கிடைக்கும். வெட்டினால், வெள்ளி கிடைக்கும். அடித்தால் அலுமினயும் கூட கிடைக்கும். ஆனால், படித்தால் மட்டும் அரசு வேலை கிடைக்காது! எவ்வளவு ஆழமான கருத்து? பலே...கூடிய விரைவில் இந்த அவல நிலை மாற வேண்டி நம் தலைவர்கள் பாடுபடுவார்கள் என்று (எப்பொழுதும் போல்) நம்புவோம்!

மற்றொரு அருமை நண்பர் (பெயர் மறந்துவிட்டது!) கூறிய ஒன்று...இது தாய்மொழி வழி கல்வியை கட்டாயம் ஆக்கவேண்டுமா, இல்லையா என்பதை பற்றியது. ஒரே வரியில் முடித்துவிட்டார். அது...'பத்து வயது முதல் இவர் உனக்கு அம்மா. பதினோராவது வயத்திலிருந்து, மற்றொருவர் உனக்கு அம்மா' என்பது போல இருக்க கூடாது என்றார். ஒன்றே சொல்! அதுவும், நன்றே சொல்

இந்நிகழ்ச்சியில், நான் அனுபவித்த தகவல்கள்

- ஸ்ரீ லங்காவில் தான் தமிழ் மொழியில் மருத்துவம், விஞ்ஞானம் வரை படிக்கக்கூடிய பாட நூல்கள் உள்ளன என்பது வியக்க தக்க ஒரு தகவல் ஆகும்!

- தமிழ் செம்மொழி ஏன் ஆனது, மாற்ற ஐந்து செம்மொழிகளையும் ஒப்பிட்டு கூறியது மிகவும் அருமை.

- நானே கண்டது, தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களை விட, சிங்கபோரில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் பற்று அதிகமாக தான் உள்ளது. ஆகவே, நாம் தமிழை கொன்றாலும் (மன்னிக்கவும்...அப்படி சொன்னாலாவது நீங்கள் தமிழ் பேசுவீர்கள் என்று தான்!) தமிழை என்னுடைய ஒரு சகோதரன் / சகோதரி வாழ வைத்து கொண்டு தான் இருப்பார்கள்.

ஆகவே, தமிழ் ஒரு உன்னதமான மொழி. அதை அவ்வளவு சுலபமாக அழித்து விட முடியாது. தமிழ் நிச்சயம் சாகாது, இளைஞர்கள் நாங்கள் இருக்கிறோம் என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன். அடுத்த பதிவில் சந்திப்போம்!

என்றும் உங்கள் அன்பன்!


தமிழ் சுட்டிகள் தேடல்

.
Thursday, 26 March, 2009 11:59 AM
.
சிறுவர்கள் மத்தியில் சிறந்த தமிழ் பேச்சாளரை தேர்வு செய்வதற்கான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு சுட்டிகள் தொடர் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலைø 9 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
.
இளம் பேச்சாளர்களுக்கான நிகழ்ச்சி வெற்றியை தொடர்ந்து சிறார்களுக் கான நிகழ்ச்சியாக நடைபெறும் இதில் பேராசிரியர் சுபவீரபாண்டியன், பர்வீன் சுல்தானா, சல்மா ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.சிறுவர்கள் 3 நிமிடத்திற்கு பல்வேறு தலைப்புகளில் நல்ல கருத்துக்களை பேசி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அவர்களின் மேடை ஆளுமை, பேச்சுத்திறன், துணிச்சல் ஆகிய வற்றை கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.




பரிசல்காரன்
ரசிப்போர் விழி தேடி...
விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு எனும் நிகழ்ச்சி.ஆரம்பிப்பதாக விளம்பரம் செய்யப்பட்ட நாளிலிருந்து எதிர்பார்த்து, விடாமல் பார்த்து வருகிறேன். போட்டி முக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
போட்டியாளர்கள் எல்லாருமே சிறந்த தனித்திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றாலும், அருள் பிரகாஷ், விஜயன், ராஜ்மோகன், ராமநாதன் (கலக்கப்போவது யாரு முதல் பகுதியில் வந்து பிரபலமான அதே தேவகோட்டை ராமநாதன்தான்!) ஆகிய நால்வருக்கும்தான் கடும் போட்டி நிலவுகிறது. மற்ற மூவரை விடவும் பேச்சு, பட்டிமன்றம், காவியச்சுற்று என்று எல்லாச் சுற்றிலும் கலக்கி எடுக்கும் அருள்பிரகாஷின் வெற்றிக்கு அவரது அனுபவம் முக்கியக்காரணம். மற்ற மூவரை விடவும் வயதில் பெரியவர் இவர்.
சென்றவாரம் மரபுக்கவிதைச் சுற்று. அதன் தொடர்ச்சியாய் நேற்று அருள்பிரகாஷும், விஜயனும் மரபுக்கவிதை முழக்கமிட, பிறகு புதுக்கவிதைச் சுற்று ஆரம்பமாகியிருக்கிறது.அதில் ராஜ்மோகன் மின்சாரத்தடை பற்றி சொன்ன கவிதையை உங்களோடு பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும் என்பதால் இதை எழுதுகிறேன்.
தடங்கலுக்கு வருந்துகிறோம் வீட்டில் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிதான்.மின்சாரம் இல்லாததால் அதுகறுப்பாகவே இருக்கிறது.அம்மாக்கள் அனைவரும்எந்த பயமும் இல்லாமல்கொடிக்கம்பிக்கு பதிலாகமின்சாரக்கம்பியிலேயேதுணி காயப்போடுகிறார்கள்.சங்ககாலம் பொற்காலம் எல்லாம் அந்தக்காலம்வெளிச்சமில்லாமல்வகுப்புகளெல்லாம் வீதிக்கு வந்துவிட்டதேஇதுதான் இருண்டகாலம்.
இன்றையதேதியில்அஜீத், விஜய்யை விடமின்சாரத்தடைக்குத்தான்விசிறிகள் அதிகமாக இருக்கின்றது.வ.உ.சி. கப்பல்களை ஒட விட்டார்.இன்று வ.உ.சி.வீட்டில்கூடமிக்சி, க்ரைண்டர்எதுவுமே ஓடுவதில்லை.குழந்தைகளின்பிறப்பைத் தடுப்பதுகருத்தடை.குழந்தைகளின்சிரிப்பைத் தடுப்பதுமின்தடை.அதிகாரிகளே...சீக்கிரம் எங்கள் வீடுகளுக்குசிம்னி விளக்காவது தாருங்கள்.அதற்கும் பட்ஜெட் போதவில்லையென்றால்சிக்கிமுக்கி கற்களையாவது தாருங்கள்.மின்சாரத்தடைமுதிர்கன்னியாய் இருந்த மெழுகுவர்த்திகளுக்குமுகூர்த்தம் கொடுத்திருக்கிறது. சபாஷ் ராஜ்மோகன்.
அருள்பிரகாஷ் காதலைப் பற்றி சொன்ன கவிதையும் அருமையாக இருந்தது.விஜயன் – வைகோ போலவே தோளசைத்துப் பேசும் இவர் தண்ணீர்ப்பஞ்சம் குறித்துக் கவிபடைத்தார்.குழந்தையைச் சுமந்த இடுப்புகளெல்லாம் – இன்றுகுடங்களைச் சுமந்து அலைவது ஏனோபனிக்குடம் உடைத்த மனிதா – உனக்குமண்குடம் உடைக்க தண்ணீர் உண்டா?என்றெல்ல்லாம் சாட்டையடி அடித்த அவர், முடிக்கும் போது சொன்ன ஒரு குறும்பா அசத்தியது..காவிரிப்பிரச்னைகாவிரிப்ப்ரச்னைஇப்படிப் பேசிப்பேசியேவறண்டுபோகும் நாக்கு.
எத்தனை பேர் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் நல்ல இந்தக் கவிதைகளை பதிவு செய்ய வேண்டும் என்பதால்தான் எழுதினேன்.





ரசிகனின் பார்வை
Just another WordPress.com weblog
விஜய் தொலைக்காட்சி சமீப காலங்களில் புதிது புதிதாக நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி கொண்டு உள்ளது. வித்யாசமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து தந்து கொண்டு இருக்கிறது, அதற்காக கண்டிப்பாக பாராட்ட வேண்டும், தொடர்களை தராமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தருவதற்கு விஜய் தொலைக்காட்சி ஒரு முன்னுதரானமாக இருந்தது என்றால் மிகை ஆகாது.


தமிழகம் பேச்சுக்குப் புகழ் பெற்றது. அது தமிழ் மொழியின் சிறப்பம்சம். யாராக இருந்தாலும் தமிழ் பேசினால் கூடவே அவருக்கும் சேர்ந்து பெயர்கிடைத்து விடும். அந்த அளவுக்கு வீச்சு கொண்டது தமிழ்.அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, கிருபானந்த வாரியார், சாலமன் பாப்பையா, வைகோ, வைரமுத்து என தமிழகம் கண்ட தலைசிறந்த பேச்சாளர்கள் பலர்.

தமிழர்களுக்கு தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல, அது அவர்களது வாழ்க்கை, மூச்சு, தமிழனின் அடையாளம். இந்த நிலையில்தான் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம், தமிழை முதன்மைப்படுத்தி ஒரு புதிய நிகழ்ச்சியைப் படைக்க முடிவு செய்தது. அதில் பிறந்ததுதான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு.

தமிழகத்தின் சிறந்த பேச்சாளரைத் தேடும் தேடல்தான் இந்த வித்தியாசமான நிகழ்ச்சி.

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்புகின்றது.
மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இதற்கான தேடலை விஜய் தொலைக்காட்சி நடத்தியது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் இந்த பேச்சாளர் தேடல் தொடர்ந்தது.

தகுதிச் சுற்றில், தமிழ் எழுத்து, வார்த்தை, வாக்கியம் என்ற அடிப்படையில் போட்டியாளர்கள் பேசப் பணிக்கப்பட்டனர்.
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன், கவிஞர் அறிவுமதி ஆகியோர் போட்டியின் நடுவர்களாகப் பணியாற்றியுள்ளனர். மொத்தம் 6 மண்டலங்களிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் தகுதிச் சுற்றில் தேறிஅடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

பின்னர் அவர்களிலிருந்து 30 பேர் இறுதியாக போட்டிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இவர்கள் கதை சொல்வது, கவிதை படிப்பது, பட்டிமன்றம், சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுக்களில் பங்கு கொண்டு தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும்.

இந்த சுற்றுக்களின் இறுதியில், வெற்றி பெறும் பேச்சாளருக்கு, தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர் என்ற பட்டம் சூட்டப்படும். அது போக, ரூ. 5 லட்சம் பரிசும் காத்திருக்கிறது.



தமிழ் பேச்சு எங்கள் மூச்சு - கவிதைச் சுற்று


Naresh Kumar

10 nov 2008, 08:36

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு - கவிதைச் சுற்று

“இன்றையதேதியில் அஜீத், விஜய்யை விட மின்சாரத்தடைக்குத்தான் விசிறிகள் அதிகமாக இருக்கின்றது”
வெள்ளிக்கிழமை மாலை வரிசையாக சேனல்களை மாற்றிக் கொண்டே வரும் போது விஜய் டிவியில் ராஜ் மோகனின் இந்தக் கவிதையை தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு இந்த வாரம் கவிதைச் சுற்று என்று விளம்பரம் செய்தனர். என்னதான் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி என்றாலும் சில காரணங்களால் தொடர்ச்சியாக பார்க்க முடியாத சூழ்நிலையில், இந்த வாரம் கண்டிப்பாக பார்ப்பது என்ற முடிவுடன் ஞாயிற்றுக் கிழமை காலை அதிகாலை 8.45க்கே எழுந்து டீ குடித்து விட்டு வரும் போது மணி சரியாக 9.00.
தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி கடைசி கட்டத்தை நெருங்கியிருந்தது. இதில் விஜயன், நெல்சன், அருள் பிரகாஷ் மற்றும் ராஜ் மோகனின் பேச்சுகள் எனக்கு மிகப் பிடிக்கும்.
அதிலும் விஜயனின் பாவனைகள், பேச்சுகள் அனைத்தும் வைகோவை ஞாபகப் படுத்துவதாக நெல்லைக் கண்ணனே நெகிழ்ந்திருக்கிறார்.
கவிதையாகப் பொழிந்த இந்த ஞாயிறில், கலக்கியதில் முதலிடம் அருள் பிரகாஷுக்குதான். அவரது கவிதைப் பேச்சு சில இடங்களில் ஏனோ எனக்கு வைரமுத்துவை ஞாபகமூட்டியது. நிகழ்ச்சி மரபுச் சுற்ரறு மற்றும் புதுக்கவிதை என இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தது.
மரபுக்கவிதைகள் பகுதிக்கு ''ஆற்றுக்கு பாதையிங்கே யார் போட்டது'' எழுதிய கவிஞர் புலமைப்பித்தன் தலைமை வகித்தார். அவர் பேசும் போது, மழை வறண்டு இருக்கும் சமயத்தில் நீருக்கு என்ன செய்வது என்று சிந்தித்து, நீரை தேக்க வேண்டும் என்று சிந்தித்தவன் தமிழன். உலகில் முதன் முதலில் ஆற்றுக்கு குறுக்கே அணையைக் கட்டியவன் கரிகாலன். அப்பேர்பட்ட தமிழனுக்குத்தான் இன்று தண்ணீரில்லை என்று கூறினார்.

தொடர்ந்து நெல்லைக் கண்ணன் பேசும் போது, நம் பெரியவர்கள் கங்கை, சிவன் தலையில் உதிக்கிறது, திருமால் கடலில் பள்ளி கொண்டுள்ளார். குளக்கரையில் பிள்ளையாரை கொண்டுவந்து வைத்தார்கள், கடலுக்கருகில் முருகனை வைத்தார்கள், வேப்ப மரம் அம்மனுக்கு உகந்தது.... இப்படி இயற்கையை கடவுளோடு சேர்த்து சொன்னதே அதை பாதுகாக்க வேண்டுமென்றுதான். ஆனால் நம்மாட்கள் அப்போதும் கோட்டை விட்டார்கள் என்றார்.


அடுத்து ஆகஸ்ட் 15 (ஆ'கஷ்டப்' 15) தலைப்பில் தேவகோட்டை ராமநாதன் பேசினார். அவர் கவிதையில் சில வரிகள்,
''காசில்லாமல் கல்வி கஷ்டம் காவேரியில் தண்ணீர் கஷ்டம் பாமரருக்கு கஞ்சி கஷ்டம் படித்தவனுக்கு வேலை கஷ்டம் .................................................................... .................................................................... தமிழைப் படிக்க தமிழருக்கே கஷ்டம் ஒருமைப்பாடு நாட்டில் கஷ்டம் ஒலிம்பிக்கில் தங்கம் கஷ்டம்" தட்சணை வாங்கி தாலியின் ஆயுள் நிச்சயம் செய்கிற நிதர்சனம் விடுமா?” என்றும் வினவினார்.

அவரைத்தொடர்ந்து சுந்தரராமன் புவி வெப்பமயமாதல் தலைப்பில் இரு வெண்பாக்களை பதிவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய நெல்சன் மரபுக் கவிதை சுற்றில் அந்தளவுக்கு சோபிக்க வில்லையென்றாலும், அவரது பேச்சு அர்த்தம் நிறைந்ததாக இருந்தது

மரபுக்கவிதை சுற்றைத் தொடர்ந்து கவிஞர் நந்தலாலா தலைமையில் புதுக் கவிதை மற்றும் ஹைக்கூ கவிதைச் சுற்று ஆரம்பமாகியது.
கவி்ஞர் நந்தலாலா சொன்ன இரு ஹைக்கூ கவிதைகள்
"கையிலே மை முகத்திலே கரி' வருகிறது தேர்தல்"
''பூங்காவில் மாமிச நாற்றம் காதலர்கள் பேசிக் கொள்கிறார்கள் ஏதோ ஓர் இதயம் எரிகிறதென்று"

புதுக்கவிதை சுற்றில் முதலில் பேசியது அபிராமி அவர்கள் "இயற்கை" என்ற தலைப்பில்
"அரும்புகழ் கொண்ட உங்கள் முன் இந்த அரும்புகளின் அரைகுறை கவிதைகள்தான் இதுவும்" என்று ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தார்..
"நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன் என்னை ஓர் அழகான் இளம்பெண் கடந்து சென்றாள் அவள் கைகளில் சூரிய வெப்பம் படாதிருக்க கையுறை அணிந்திருந்தாள் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமென்பதற்காக முகமூடி அணிந்திருந்தாள் முகம் முழுக்க முகப்பூச்சு! அழகான பெண்ணுக்கு இந்த நிலைமை என்றால், என் பூமித்தாய் எவ்வளவு அழகானவள்!!! அவளுக்கு நாம் எந்தப் பாதுகாப்பையும் செய்வதில்லையே?" என்பதைத் தொடர்ந்து "வரமும் சாபமானது - இங்கே மழையும் அமிலமானது என் ஓசோன் படலத்தில் ஓட்டையிட்டாய் உன் பசுமைப் படலத்தை ஏனோ கோட்டை விட்டாய் உருவாக்க உனக்கு திறமையில்லாத போது அழிக்கத் தந்தது யார் தந்த உரிமை".

இவரைத் தொடர்ந்து "மின்சாரம்" தலைப்பில் ராஜ்மோகன் பேசினார் அவரது கவிதை வரிகளில் சில...
"தடங்கலுக்கு வருந்துகிறோம்
வீட்டில் இருப்பதென்னவோ வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிதான். மின்சாரம் இல்லாததால் அது கறுப்பாகவே இருக்கிறது.
அம்மாக்கள் அனைவரும் எந்த பயமும் இல்லாமல் கொடிக்கம்பிக்கு பதிலாக மின்சாரக்கம்பியிலேயே துணி காயப்போடுகிறார்கள்.
சங்ககாலம் பொற்காலம் எல்லாம் அந்தக்காலம் வெளிச்சமில்லாமல் வகுப்புகளெல்லாம் வீதிக்கு வந்துவிட்டதே இதுதான் இருண்டகாலம்.
இன்றையதேதியில் அஜீத், விஜய்யை விட மின்சாரத்தடைக்குத்தான் விசிறிகள் அதிகமாக இருக்கின்றது.


வ.உ.சி. கப்பல்களை ஒட விட்டார். இன்று வ.உ.சி.வீட்டில்கூட மிக்சி, க்ரைண்டர் எதுவுமே ஓடுவதில்லை.
குழந்தைகளின் பிறப்பைத் தடுப்பது கருத்தடை. குழந்தைகளின் சிரிப்பைத் தடுப்பது மின்தடை.
அதிகாரிகளே... சீக்கிரம் எங்கள் வீடுகளுக்கு சிம்னி விளக்காவது தாருங்கள். அதற்கும் பட்ஜெட் போதவில்லையென்றால் சிக்கிமுக்கி கற்களையாவது தாருங்கள்.


இந்த இருண்ட இரவுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் எங்கள் கடைசி இரவுகளை நினைவுறுத்துகிறது.. மின்சாரத்தடை முதிர்கன்னியாய் இருந்த மெழுகுவர்த்திகளுக்கு முகூர்த்தம் கொடுத்திருக்கிறது...."
ராஜ்மோகனைத் தொடர்ந்து அருள் பிரகாஷ் "காதல்" தலைப்பில் புதுக்கவிதை வழங்கினார்.


"பொறு பெண்ணே! தாடியின் தத்துவம் தெரியுமா உனக்கு? காதலிக்கும் போது, என் காதலி முகம் பார்க்க வேண்டுமென்பதற்காக சவரம் செய்து எங்கள் முகத்தை சலவைக் கல்லாக வைத்திருக்கிறோம்! பிரிவு நேர்ந்தால், அவள் முகம் பார்த்த கண்ணாடியில், வேறு யாரும் முகம் பார்த்து விடக் கூடாது என்பதற்காக ஒரு கருப்புத் திரை போட்டு வைத்திருக்கிறோம் அதற்கு நீங்கள் தாடி என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்!!!! காதல் சட்டமன்றத் தேர்தலில் இதயமெனும் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தேன்! விழிப்பார்வையெனும் வாக்குகள் விழந்ததென்னவோ உண்மைதான், ஆனால் இந்த வேட்பாளன் தொகுதியிடம் தோற்றுப் போனான்! இதய டெபாசிட் இழந்து போனான்! நம் காதல் கூட ஒரு சுதந்திரப் போராட்டம்தான்! இதயம் நடத்தும் ஒத்துழையாமை இயக்கம் கண்கள் நடத்தும் உப்புச் சத்தியாகிரகம் கனவுகள் நடத்தும் வட்ட மேஜை மாநாடு ஆங்கிலேயப் பிரதிநிதியாய் ஜாதியின் பெயரைச் சொல்லி பெற்றவர்கள் நடத்தும் ஜாலியின் வாலாபாக் படுகொலை! நம் காதல் கூட ஒரு சுதந்திரப் போராட்டம்தான்! இரண்டையுமே கண்டுபிடித்த பின் தொலைத்து விட்டோம்!!!!!"

அருள்பிரகாஷ் ஹைக்கூவைப் பற்றி பேசும் போது, "முதல் இரண்டு வரிகளில் வியப்பை ஏற்படுத்த வேண்டும் கடைசி வரியில் புருவத்தை உயர்த்த வேண்டும் இதுதான் ஹைக்கூவின் இலக்கணம்.." தமிழில் இதை குறும்பா என்பார்கள், குறுகிய பாவாக இருப்பதாலும் அடிக்கடி குறும்பு செய்வதாலும் இதைக் குறும்பா என்பார்கள்!!!

இவரைத் தொடர்ந்து "தண்ணீர் பஞ்சம்" தலைப்பில் விஜயன் பேசினார். அவரது கவிதை வரிகளில் சில..
"தண்ணீர் வெறும் தண்ணீரல்ல நீல வானத்தின் ஆனந்தக் கண்ணீர் இந்த தண்ணீர் பூமித்தாய் சுரக்கும் தாய்ப்பால் தண்ணீர் தண்ணீர் வெறும் தண்ணீரல்ல வானம் பூமிக்கு வீசி எறிகிற வைரக் கற்கள் தண்ணீர் விண்ணுக்கும், மண்ணுக்கும் இயற்கை அமைத்த பாலம் இந்த தண்ணீர்! தண்ணீர் வெறும் தண்ணீரல்ல குழந்தையைச் சுமந்த இடுப்புகளெல்லாம் – இன்று குடங்களைச் சுமந்து அலைவது ஏனோ குடமே குழந்தையாய் மாறியதால் தானோ! பனிக்குடம் உடைத்த மனிதா – உனக்கு மண்குடம் உடைக்க தண்ணீர் உண்டா? முடிந்த போருக்கே கண்ணீரில்லை

தண்ணீருக்காக இன்னொரு போரா?" என்று அசத்திய விஜயனின் ஹைக்கூ கவிதைகள்,
"முத்தமிடாத காவிரி ஏக்கத்தில் பெருமூச்சு விடும் வங்கக்கடல்"
"காவிரிப்பிரச்சனை காவிரிப்பபிரச்சனை இப்படிப் பேசிப்பேசியே வறண்டுபோகும் நாக்கு"

எனக்கு நினைவில் இருக்கும் வரிகளை அளித்துள்ளேன். உண்மையில் இது அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நிகழ்ச்சி........

பி.கு.1. கவிதை மட்டும் அசத்தலல்ல. அதை கம்பீரமான குரலில் கேட்கும் போது மிக அருமை!

பி.கு.1. இந்த அசத்தலான நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு, வாரநாட்களில் ஏதோ ஒரு நாளில், மாலை வேளையில் இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.



விஜய்யின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு
விஜய் டிவியில் இன்னும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியாக தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற புத்தம் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
தமிழகம் பேச்சுக்குப் புகழ் பெற்றது. அது தமிழ் மொழியின் சிறப்பம்சம். யாராக இருந்தாலும் தமிழ் பேசினால் கூடவே அவருக்கும் சேர்ந்து பெயர்கிடைத்து விடும். அந்த அளவுக்கு வீச்சு கொண்டது தமிழ்.அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, கிருபானந்த வாரியார், சாலமன் பாப்பையா, வைகோ, வைரமுத்து என தமிழகம் கண்ட தலைசிறந்த பேச்சாளர்கள் பலர்.தமிழர்களுக்கு தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல, அது அவர்களது வாழ்க்கை, மூச்சு, தமிழனின் அடையாளம்.
இந்த நிலையில்தான் விஜய் டிவி நிர்வாகம், தமிழை முதன்மைப்படுத்தி ஒரு புதிய நிகழ்ச்சியைப் படைக்க முடிவு செய்தது. அதில் பிறந்ததுதான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு.தமிழகத்தின் சிறந்த பேச்சாளரைத் தேடும் தேடல்தான் இந்த வித்தியாசமான நிகழ்ச்சி.தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்பவுள்ளது.
மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இதற்கான தேடலை விஜய் டிவி நடத்தியது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் இந்த பேச்சாளர் தேடல் தொடர்ந்தது.தகுதிச் சுற்றில், தமிழ் எழுத்து, வார்த்தை, வாக்கியம் என்ற அடிப்படையில் போட்டியாளர்கள் பேசப் பணிக்கப்பட்டனர்.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன், கவிஞர் அறிவுமதி ஆகியோர் போட்டியின் நடுவர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
மொத்தம் 6 மண்டலங்களிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் தகுதிச் சுற்றில் தேறிஅடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.பின்னர் அவர்களிலிருந்து 30 பேர் இறுதியாக போட்டிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இவர்கள் கதை சொல்வது, கவிதை படிப்பது, பட்டிமன்றம், சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுக்களில் பங்கு கொண்டு தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும்.
இந்த சுற்றுக்களின் இறுதியில், வெற்றி பெறும் பேச்சாளருக்கு, தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர் என்ற பட்டம் சூட்டப்படும். அது போக, ரூ. 5 லட்சம் பரிசும் காத்திருக்கிறது.மார்ச் 2ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியைக் கண்டு, கேட்டு ரசிக்கலாம்.
இந்த நிகழ்ச்சி குறித்து விஜய் டிவியின் நிகழ்ச்சி பொறுப்பாளர் கே.ஸ்ரீராம் கூறுகையில், தமிழ் மொழிக்கும், அதனுடன் தொடர்புடைய மாபெரும் தலைவர்கள், பேச்சாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், நன்றி கூறும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை தொடங்கியுள்ளோம்.நல்ல தமிழில் பேசுவதை ஊக்குவிக்கும் வகையிலான சிறிய முயற்சியே இது என்றார் ஸ்ரீராம்.









Whats in store for TPEM Juniors ??
- 4.bp.blogspot.com/.../s400/Image5.jpg
After the success of the first ever hunt for the best Tamil orator in Thamizh Pechu Engal Muchu, Vijay TV is set on its mission in taking the promotions of the Thamizh language to the next level its best to the tap talents at a young age… well that’s what Vijay TV has done. Vijay TV has launched the junior edition of the hunt for the best Tamil orator in Tamilnadu.
Thamizh Pechu Engal Muchu Chuttigal is the platform for kids aged between 8 – 15yrs (i.e.4th – 10th class) to prove their love and passion for the language. At the auditions held at various cities like Chennai, Coimbatore, Madurai, Thirunelveli, Salem and Thiruchi; over 350 kids participated with great enthusiasm. Renowned Tamil scholars like Writer / Politician Subha Veera Pandiyan, Professor / Orator Parveen Sultana, Professor Salma, writer / editor lena Tamil Vanan.winner of Thamizh Pechu Engal Muchu title Vijayan, finalist Arul Prakash and other scholars from the field of Thamizh literature judged the Thamizh speaking skills of these kids.
From the 6 zones, over 160 best orators were selected and they were put to task to select the best 50 speakers for the final competition. The contestants were to talk on various topics like ‘Vannathupoochi’, ‘Kadamai’, ‘Nambikai’, ‘Iyarkai’, ‘Thooimai’, ‘Nanneri’., etc for 3 minutes. The kids’ were judged on the basis of their presentation skills, passion towards the language, stage presence, speaking skills, creativity and general knowledge. The judges also checked the participants’ interaction level with the judges. The stage is set, for the competition… the love and passion for the language shown by this kids will surely revive the dormant Thamizh spirit in all of us. The competition will reach newer heights as the selected 50 kids will face tough times ahead and will not only encourage them but also their parents and teachers to help them put their best foot forward.
Posted by Usha Sudharsan .






























































www.tellychakkar.com/.../29feb/news_vijay_tv.php


Thamish Pechu Engal Moochu on Vijay TV

Thamizh is not only a language but also a way of life for every Thamizhian. Vijay TV in its efforts to promote the language Thamizh presents ‘Aachi Thamizh Pechu Engal Moochu’, the first ever search for the best Thamizh orator in Tamilnadu.


Speaking about the program, Mr.K.Sriram, Head Vijay TV says, “The programme is our way of thanking and respecting our language Tamil and the great scholars who were and are associated with it and this program in a small way would promote the art of speaking in good Tamil”.

This show is inspired by the greatest Tamil orators like Kalaignar Mu. Karunanidhi, Arignar Anna, Solomon Pappiya, Kripananda Variar, Vaiko, Variamuthu and many others, who’d emerge as the best Tamil orator in Tamilnadu. It was an intensive statewide hunt for the most competent Tamil orators from across the state scanning cities like Salem, Coimbatore, Madurai, Trichy, Thirunelveli and Chennai.


In the audition stage, the participants were made to choose from a Tamil “ letter”, “ word”, or “sentence” who spoke extempore. From the 6 zones, over 200 best orators were selected and they were put to task at various levels of competition. Post elimination, 30 final contestants will be chosen and they will be put to test in many rounds varying from Story Narration, Poetry recital, Pattimandram, Elocution, etc.,

Renowned Tamil scholars, ‘Thamizh Kadal’ Nellai Kannan and Arivumathi judged the competition. The winner will be titled “Best Tamil Orator of Tamilnadu” with prize money of Rs 5 lakh. With original themes, best orators, innovative rounds – the novel Tamil reality show ‘Aachi Thamizh Pechu Engal Muchu’ launches March 2, 2008; every Sunday at 9am only on Vijay TV.
By Tellychakkar Team

Posted on 29 Feb 2008 12:30 pm





Thamizh Pechu Engal Muchu Chuttigal
After the success of the first ever hunt for the best Tamil orator in Thamizh Pechu Engal Muchu, Vijay TV is set on its mission in taking the promotions of the Thamizh language to the next level. They say its best to the tap talents at a young age… well that's what Vijay TV has done.
Vijay TV has launched the junior edition of the hunt for the best Tamil orator in Tamil Nadu. Thamizh Pechu Engal Muchu Chuttigal is the platform for kids aged between 8 - 15yrs (i.e.4th - 10th class) to prove their love and passion for the language. At the auditions held at various cities like Chennai, Coimbatore, Madurai, Thirunelveli, Salem and Thiruchi; over 350 kids participated with great enthusiasm. Renowned Tamil scholars like Writer / Politician Subha Veera Pandiyan, Professor / Orator Parveen Sultana, Lena Thamizhvanan, winner of Thamizh Pechu Engal Muchu title Vijayan, finalist Arul Prakash and other scholars from the field of Thamizh literature judged the Thamizh speaking skills of these kids. From the 6 zones, over 160 best orators were selected and they were put to task to select the best 50 speakers for the final competition.
The contestants were to talk on various topics like 'Vannathupoochi', 'Kadamai', 'Nambikai', 'Iyarkai', 'Thooimai', 'Nanneri'., etc for 3 minutes. The kids' were judged on the basis of their presentation skills, passion towards the language, stage presence, speaking skills, creativity and general knowledge. The judges also checked the participants' interaction level with the judges.
The stage is set, for the competition… the love and passion for the language shown by this kids will surely revive the dormant Thamizh spirit in all of us. The competition will reach newer heights as the selected 50 kids will face tough times ahead and will not only encourage them but also their parents and teachers to help them put their best foot forward. A show that brings to light the greatness of the Thamizh language,
Thamizh Pechu Engal Muchu these budding talents who will be seen exhibiting their Thamizh oratorical skills from March 29, 2009, every Sunday 9am onwards only on Vijay TV. Don't miss it!
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு

மகுடத்தில் மேலும் ஒரு வெற்றிக்கல். நேற்று தி.மு.க சார்பில் நடை பெற்ற மாநில அளவிலான பேச்சுப் போட்டி மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டியில் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் பந்க்கேற்பாளர்கள் குறிஞ்சிக் கொற்றவன் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசும், செல்வி.இராம.கபிலா மாநில அளவிலான கவிதைப் போட்டியில் இரண்டாமிடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள் . மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான பரிசுகளை தமிழ்ப்பேச்சு சுட்டிகள் பெற்றுள்ளார்கள். வெற்றியாளர்களை நாமும் வாழ்த்துவோம்.

Friday, October 9, 2009


உணர்வுகள்! நிகழ்வுகள்! சிந்தனைகள்! - அ. கௌரிசங்கர்.
http://me2atblog.blogspot.com

பெண்களை தொலைக்காட்சி மூன் கட்டிப்போட்டு இரவு நேரங்களில் வீட்டை ஆட்சி செய்த நெடுந்தொடர்களுக்கு மத்தியில் வித்தியாசம் காட்டியது 'Start Vijay'. 'சினிமாயில்லாத பொழுதுபோக்கு நிகழ்ச்சியா?' எனற விதிகளுக்குக் கட்டுப்படாமல 'அழகி', 'கலக்கப்போலது யாரு?', 'நீயா நானா', போன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்கு தமிழ் வடிவம் தந்தார்கள்.
இந்த வரிசையில் இப்பொழுது முத்திரை பதிக்க வந்துள்ளது 'தமிழ் பேச்சு - எங்கள் மூச்சு!'. மக்களிடமுள்ள தமிழ் அறிவை மேடை ஏற்றும் முயற்சி இது. ஏற்ற தகுதியுள்ள நாடுவர்கள்.
திறமை படைத்த போட்டியாளர்கள்.தமிழ் அலைவரிசைகளில் தமிழைக் கொல்லும் தொகுப்பாளர்கள் மத்தியில் தமிழையே மையமாகக் கொண்டு ஒரு நிகழ்ச்சி என்ற முயற்சிக்கு பல பாராட்டுக்கள்.
Tuesday, August 19, 2008
http://www.thiraivirunthu.com/video/thamizh-pechu-engal-moochu-episode-5/

எத்தனையோ தமிழ் தொலைக்காட்சிகள் வசதியிருந்தும் வாய்ப்பிருந்தும் செய்யாததை, விஜய் டிவி தொடர்ந்து செய்து கொண்டிருக்க்கிறது. நடுவராக நெல்லை கண்ணன். நெல்லை கண்ணன் காங்கிரஸ்வாதியாக இருந்தாலும் வித்தியாசமானவர். நல்ல பேச்சாற்றல் மிக்கவர்.

பட்டிமன்ற ராஜாவை சிறப்பு விருந்தினராக கொண்டு புதிய கால தொடர் தொடங்கியிருக்கிறது.அரட்டை அரங்க திடீர் பேச்சாளர்களை கண்டு ஓடும் நிலையில் இந்த நிகழ்ச்சி உண்மையிலே வரம் தான்.இந்த தொகுப்பில் செல்பேசி, அறிவியல் வளர்ச்சியின் தாக்கம், இன்றைய இளைஞர்களின் நாட்டுப்பற்று மற்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என வெவ்வேறு தலைப்புகளில் அசத்தி விட்டார்கள் பேசியவர்கள்.

ராணுவ வீரனின் மரணம் தியாகம் பெரிய விசயமில்லை என தவறாக பொருள் படும் படி பேசியவரை ஒரு ஆசிரியராக கண்டிப்புடன் திருத்தி (ஆச்சர்யம்: பேசியவரும் ஆசிரியர் தான்) மேடை பேச்சுக்கு வேண்டிய கவனத்தை உணர்த்தினார் நெல்லை கண்ணன்.அதே வேளையில் நடந்த விசயங்களை மேற்கோள் காட்டுகையில் உள்ள திரிதலையும் சுட்டிக்காட்டினார்.அறிவியல் வளர்ச்சியின் தாக்கம் பற்றி பேசியவர் உலக அரசியலயையும் தொட்டு பேசினார். செல்லப் பையனும் குட்டி பையனும் துணுக்கு அருமை.அதிகமாக உணர்ச்சி வச்சபட்டதானலையோ என்னவோ எதிர்வாதம் செய்தவரை எள்ளல் செய்தார். தவிர்த்திருக்கலாம். பேசியவரின் ஆளுமையும், பேச்சு நடையும், நினைபபாற்றலும் வைகோவை ஞாபக படுத்தியது. நெல்லை கண்ணன் அழுதே விட்டார், ஆனந்தத்தில் அவரை ஆற கட்டி தழுவிக்கொண்டார்.

தமிழ் ஆர்வம் உள்ள எவரும் காண வேண்டிய நிகழ்ச்சி இது. கண்டிப்பாக பாருங்கள்.இந்த நிகழ்ச்சி நீண்ட காலம் தொடர வேண்டும்.