Monday, October 12, 2009


பரிசல்காரன்
ரசிப்போர் விழி தேடி...
விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு எனும் நிகழ்ச்சி.ஆரம்பிப்பதாக விளம்பரம் செய்யப்பட்ட நாளிலிருந்து எதிர்பார்த்து, விடாமல் பார்த்து வருகிறேன். போட்டி முக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
போட்டியாளர்கள் எல்லாருமே சிறந்த தனித்திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றாலும், அருள் பிரகாஷ், விஜயன், ராஜ்மோகன், ராமநாதன் (கலக்கப்போவது யாரு முதல் பகுதியில் வந்து பிரபலமான அதே தேவகோட்டை ராமநாதன்தான்!) ஆகிய நால்வருக்கும்தான் கடும் போட்டி நிலவுகிறது. மற்ற மூவரை விடவும் பேச்சு, பட்டிமன்றம், காவியச்சுற்று என்று எல்லாச் சுற்றிலும் கலக்கி எடுக்கும் அருள்பிரகாஷின் வெற்றிக்கு அவரது அனுபவம் முக்கியக்காரணம். மற்ற மூவரை விடவும் வயதில் பெரியவர் இவர்.
சென்றவாரம் மரபுக்கவிதைச் சுற்று. அதன் தொடர்ச்சியாய் நேற்று அருள்பிரகாஷும், விஜயனும் மரபுக்கவிதை முழக்கமிட, பிறகு புதுக்கவிதைச் சுற்று ஆரம்பமாகியிருக்கிறது.அதில் ராஜ்மோகன் மின்சாரத்தடை பற்றி சொன்ன கவிதையை உங்களோடு பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும் என்பதால் இதை எழுதுகிறேன்.
தடங்கலுக்கு வருந்துகிறோம் வீட்டில் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிதான்.மின்சாரம் இல்லாததால் அதுகறுப்பாகவே இருக்கிறது.அம்மாக்கள் அனைவரும்எந்த பயமும் இல்லாமல்கொடிக்கம்பிக்கு பதிலாகமின்சாரக்கம்பியிலேயேதுணி காயப்போடுகிறார்கள்.சங்ககாலம் பொற்காலம் எல்லாம் அந்தக்காலம்வெளிச்சமில்லாமல்வகுப்புகளெல்லாம் வீதிக்கு வந்துவிட்டதேஇதுதான் இருண்டகாலம்.
இன்றையதேதியில்அஜீத், விஜய்யை விடமின்சாரத்தடைக்குத்தான்விசிறிகள் அதிகமாக இருக்கின்றது.வ.உ.சி. கப்பல்களை ஒட விட்டார்.இன்று வ.உ.சி.வீட்டில்கூடமிக்சி, க்ரைண்டர்எதுவுமே ஓடுவதில்லை.குழந்தைகளின்பிறப்பைத் தடுப்பதுகருத்தடை.குழந்தைகளின்சிரிப்பைத் தடுப்பதுமின்தடை.அதிகாரிகளே...சீக்கிரம் எங்கள் வீடுகளுக்குசிம்னி விளக்காவது தாருங்கள்.அதற்கும் பட்ஜெட் போதவில்லையென்றால்சிக்கிமுக்கி கற்களையாவது தாருங்கள்.மின்சாரத்தடைமுதிர்கன்னியாய் இருந்த மெழுகுவர்த்திகளுக்குமுகூர்த்தம் கொடுத்திருக்கிறது. சபாஷ் ராஜ்மோகன்.
அருள்பிரகாஷ் காதலைப் பற்றி சொன்ன கவிதையும் அருமையாக இருந்தது.விஜயன் – வைகோ போலவே தோளசைத்துப் பேசும் இவர் தண்ணீர்ப்பஞ்சம் குறித்துக் கவிபடைத்தார்.குழந்தையைச் சுமந்த இடுப்புகளெல்லாம் – இன்றுகுடங்களைச் சுமந்து அலைவது ஏனோபனிக்குடம் உடைத்த மனிதா – உனக்குமண்குடம் உடைக்க தண்ணீர் உண்டா?என்றெல்ல்லாம் சாட்டையடி அடித்த அவர், முடிக்கும் போது சொன்ன ஒரு குறும்பா அசத்தியது..காவிரிப்பிரச்னைகாவிரிப்ப்ரச்னைஇப்படிப் பேசிப்பேசியேவறண்டுபோகும் நாக்கு.
எத்தனை பேர் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் நல்ல இந்தக் கவிதைகளை பதிவு செய்ய வேண்டும் என்பதால்தான் எழுதினேன்.

No comments:

Post a Comment