Wednesday, October 7, 2009


குழ‌ந்தைகளு‌க்கான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு

சனி, 9 மே 2009( 11:55 IST )

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் முழுக்க முழுக்க சிறுவர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாட்டின் பல நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 குழந்தைகளுக்கு முதல் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.


50 சிறுவர்களுக்கும் பெண் விடுதலை வேண்டும், அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ், மெய்பொருள் காண்பதரிது, செந்தமிழ் நாடெனும் போதினிலே போன்ற பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் திருக்குறளின் வாக்கியங்கள் அளிக்கப்படும். போட்டியாளர்கள் இந்தத் தலைப்பை வைத்து கொண்டு தற்போது உள்ள சூழ்நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள்.


சிறுவர்களின் தமிழ் ஆற்றலை மதிப்பிட சுப வீரபாண்டியன், பேராசிரியை ப்ரவீன் சுல்தானா ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டு சிறுவர்களின் மேடை ஆளுமை, பேச்சுத்திறன், தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்று, விவாத திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சிறுவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.


குழந்தைகளின் பேச்சுத் திறனை வெளிக் கொண்டு வரும் இந்த நிகழ்ச்சி மே10ஆ‌ம் தே‌தி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகிறது

No comments:

Post a Comment