
மொழி மட்டுமல்ல. அது ஒரு உணர்வு. தமிழ் மொழிக்கு மரியாதை செலுத்தும் வகையில் விஜய் டிவி "தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு"
எனும் தமிழகத்தின் சிறந்த பேச்சாளரை தேர்வு செய்யும் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது.
சிறுவர்களின் தமிழ் ஆற்றலை மதிப்பிட பேரா. சுப வீரபாண்டியன், பேரா. ப்ரவீன் சுல்தானா ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டு சிறுவர்களின் மேடை ஆளுமை, பேச்சுத்திறன், தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்று, விவாத திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சிறுவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
விஜய் தொலைக்காட்சி சிறப்பான, வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தனிமுத்திரை பதித்து வருகிறது. அதன் ஒரு தமிழ் தொண்டாக தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு அமைந்துள்ளது.தமிழின் பெருமைகளையும் இலக்கியங்கள் பலவற்றின் அருமைகளையும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு இளைய சமுதாயத்தின் மூலமே அளிக்கிற பணி மிகச்சிறந்த பணியாகும்.
இந்நிகழ்ச்சி பேச்சாற்றலுக்கு மட்டுமல்லாமல் அப்பேச்சின் மூலம் பள்ளிப் படிப்பு முடித்தவுடன் மூட்டைகட்டி விடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் அருமையையும், அந்நூல்களைப் படிக்க வேண்டும் என்னும் ஆவலையும் ஏற்படுத்துகிறது.
No comments:
Post a Comment