Monday, October 12, 2009

http://thamizh.shreedharan.com

Sunday, August 03, 2008


பிரிந்து இருந்தால் தான் ஒரு பொருளின் மகிமை புரியும் ன்று சொல்வார்கள். அதை போல தான் என் தாய்மொழி தமிழை பற்றி சிங்கப்பூருக்கு சென்று நான் அறியவேண்டும் என்று இருந்திருக்கிறது என்று கருதுகிறேன். எனவே, இந்நாள் முதல் தமிழ் பற்றிய எனது அனைத்து கருத்துக்களும், என்னுடைய இந்த வலைபக்கத்தில் தமிழில் தான் எழுத போகிறேன். இது இந்த ஆகஸ்ட் பதினைந்திலிருந்து நான் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி.

சரி, இன்றைய பதிவுக்கு செல்வோம்...

இன்று, நான் சில அறிய கருத்துக்களை கேட்டேன்...'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில். நான் முன்பு கூறி இருந்ததுபொல் நான் அந்நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அதில் சபரிமாலா கூறிய ஒரு வரி, மனதை தொட்டது...அது: என் தமிழ் நாட்டில், தொண்டினால், தங்கம் கிடைக்கும். வெட்டினால், வெள்ளி கிடைக்கும். அடித்தால் அலுமினயும் கூட கிடைக்கும். ஆனால், படித்தால் மட்டும் அரசு வேலை கிடைக்காது! எவ்வளவு ஆழமான கருத்து? பலே...கூடிய விரைவில் இந்த அவல நிலை மாற வேண்டி நம் தலைவர்கள் பாடுபடுவார்கள் என்று (எப்பொழுதும் போல்) நம்புவோம்!

மற்றொரு அருமை நண்பர் (பெயர் மறந்துவிட்டது!) கூறிய ஒன்று...இது தாய்மொழி வழி கல்வியை கட்டாயம் ஆக்கவேண்டுமா, இல்லையா என்பதை பற்றியது. ஒரே வரியில் முடித்துவிட்டார். அது...'பத்து வயது முதல் இவர் உனக்கு அம்மா. பதினோராவது வயத்திலிருந்து, மற்றொருவர் உனக்கு அம்மா' என்பது போல இருக்க கூடாது என்றார். ஒன்றே சொல்! அதுவும், நன்றே சொல்

இந்நிகழ்ச்சியில், நான் அனுபவித்த தகவல்கள்

- ஸ்ரீ லங்காவில் தான் தமிழ் மொழியில் மருத்துவம், விஞ்ஞானம் வரை படிக்கக்கூடிய பாட நூல்கள் உள்ளன என்பது வியக்க தக்க ஒரு தகவல் ஆகும்!

- தமிழ் செம்மொழி ஏன் ஆனது, மாற்ற ஐந்து செம்மொழிகளையும் ஒப்பிட்டு கூறியது மிகவும் அருமை.

- நானே கண்டது, தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களை விட, சிங்கபோரில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் பற்று அதிகமாக தான் உள்ளது. ஆகவே, நாம் தமிழை கொன்றாலும் (மன்னிக்கவும்...அப்படி சொன்னாலாவது நீங்கள் தமிழ் பேசுவீர்கள் என்று தான்!) தமிழை என்னுடைய ஒரு சகோதரன் / சகோதரி வாழ வைத்து கொண்டு தான் இருப்பார்கள்.

ஆகவே, தமிழ் ஒரு உன்னதமான மொழி. அதை அவ்வளவு சுலபமாக அழித்து விட முடியாது. தமிழ் நிச்சயம் சாகாது, இளைஞர்கள் நாங்கள் இருக்கிறோம் என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன். அடுத்த பதிவில் சந்திப்போம்!

என்றும் உங்கள் அன்பன்!

No comments:

Post a Comment