
ரசிகனின் பார்வை
Just another WordPress.com weblog
Just another WordPress.com weblog
விஜய் தொலைக்காட்சி சமீப காலங்களில் புதிது புதிதாக நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி கொண்டு உள்ளது. வித்யாசமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து தந்து கொண்டு இருக்கிறது, அதற்காக கண்டிப்பாக பாராட்ட வேண்டும், தொடர்களை தராமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தருவதற்கு விஜய் தொலைக்காட்சி ஒரு முன்னுதரானமாக இருந்தது என்றால் மிகை ஆகாது.
தமிழகம் பேச்சுக்குப் புகழ் பெற்றது. அது தமிழ் மொழியின் சிறப்பம்சம். யாராக இருந்தாலும் தமிழ் பேசினால் கூடவே அவருக்கும் சேர்ந்து பெயர்கிடைத்து விடும். அந்த அளவுக்கு வீச்சு கொண்டது தமிழ்.அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, கிருபானந்த வாரியார், சாலமன் பாப்பையா, வைகோ, வைரமுத்து என தமிழகம் கண்ட தலைசிறந்த பேச்சாளர்கள் பலர்.
தமிழர்களுக்கு தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல, அது அவர்களது வாழ்க்கை, மூச்சு, தமிழனின் அடையாளம். இந்த நிலையில்தான் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம், தமிழை முதன்மைப்படுத்தி ஒரு புதிய நிகழ்ச்சியைப் படைக்க முடிவு செய்தது. அதில் பிறந்ததுதான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு.
தமிழகத்தின் சிறந்த பேச்சாளரைத் தேடும் தேடல்தான் இந்த வித்தியாசமான நிகழ்ச்சி.
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்புகின்றது.
மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இதற்கான தேடலை விஜய் தொலைக்காட்சி நடத்தியது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் இந்த பேச்சாளர் தேடல் தொடர்ந்தது.
தகுதிச் சுற்றில், தமிழ் எழுத்து, வார்த்தை, வாக்கியம் என்ற அடிப்படையில் போட்டியாளர்கள் பேசப் பணிக்கப்பட்டனர்.
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன், கவிஞர் அறிவுமதி ஆகியோர் போட்டியின் நடுவர்களாகப் பணியாற்றியுள்ளனர். மொத்தம் 6 மண்டலங்களிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் தகுதிச் சுற்றில் தேறிஅடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
பின்னர் அவர்களிலிருந்து 30 பேர் இறுதியாக போட்டிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இவர்கள் கதை சொல்வது, கவிதை படிப்பது, பட்டிமன்றம், சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுக்களில் பங்கு கொண்டு தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும்.
இந்த சுற்றுக்களின் இறுதியில், வெற்றி பெறும் பேச்சாளருக்கு, தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர் என்ற பட்டம் சூட்டப்படும். அது போக, ரூ. 5 லட்சம் பரிசும் காத்திருக்கிறது.
No comments:
Post a Comment