Tuesday, October 13, 2009

Thursday, May 15, 2008

கடவுளை நம்பினோர், கைவிடப் படார்

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு எனும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒருவரின் பேச்சு...

மீசை ஏன் முளைக்கிறதுஆணுக்குத் தெரியாது!பெண்மை ஏன் பூக்கிறதுபெண்ணுக்குத் தெரியாது!பல் ஏன் விழுகிறதுமழலைக்குத் தெரியாது!மரணம் ஏன் அழைக்கிறதுமுதுமைக்குத் தெரியாது!மனிதன் ஏன் அழுகிறான்கடவுளுக்குத் தெரியாது!இப்பாடலில், குறிப்பாக கடைசி வரி முதலில் பொருளற்றதாக எனக்கு தோன்றினாலும், நன்கு சிந்தித்தபின் அதன் ஆழ்ந்த அர்த்தம் புரிந்தது. நம்மை காப்பாற்ற கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கிறார். இதை உணராமல் மனிதன் சிறு சிறு நிகழ்ச்சிகளுக்குக் கூட அழுகிறான்.என் அனுபவத்தில் இப்போது நாம் அழுது புலம்பிக் கொண்டிருக்கும் காரியம் பின் நாட்களில் மிக சிறியதாயும் வேடிக்கையாயும் தோன்றும். அப்போது, "இந்த சிறு நிகழ்விற்கா இவ்வளவு கவலைப்பட்டோம்?" என்றாகிவிடும். இது முன்பே தெரிந்திருந்தால் மனநிம்மதியாவது மிஞ்சியிருக்கும்.ஆகவே என்ன நடந்தாலும் "கடவுளை நம்பினோர், கைவிடப் படார்".பைபிலில் இஸ்ரயேல் மக்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் கடவுளை நோக்கி மன்றாடும் போது, அவர் தரும் பதில்கள் அத்தனயும் கேலிக்கிடமாகவும், முட்டாள்தனமாகவும் தான் தோன்றும்.எடுத்துக்காட்டாக் பார்வோன் அரசன் இஸ்ரயேலரை அடிமப்படுத்துவதற்காக அவர்களை துரத்துகிறான். ஒரு பக்கம் கடல், மறுபக்கம் எதிரி நாட்டுப் படைகள், மோசே கடவுளை நோக்கி மணன்றாடுகிறார், அப்போது மோசேயோ அல்லது அம் மக்களோ என்ன எதிர்பார்த்திருப்பர்? கடவுள் கடலைக் கடக்க ஒரு பாலமோ அது ஒரு கப்பலோ உருவாக்குவார் என்று எண்ணியிருப்பர். ஆனால் கடவுளோ கோலால் கடலை அடிக்கச் சொல்கிறார். எந்த முட்டாளும் இதைச் செய்ய மாட்டான். எதிரி நாடு படையுடன் வரும்போது எவனும் கடலை அடித்து கொண்டிருக்கமாட்டான்… ஆனால் நடந்தது என்ன? மோசேயின் நம்பிக்கையால் கடல் பிளந்தது… அவர்கள் அதை எளிதாக கடந்து சென்றனர். அதே கடலே எதிரிகளுக்கு எமனாகவும் அமைந்தது. எதிரிகள் கடக்கும் போது அது அவர்கள் மேல் விழுந்து அவர்களை அழித்தது…இதேபோல் எரிக்கோ மதிலை கடந்தால் தான் வாழ்வு எனும் நிலையில் அதை இடிக்க கடவுள் கொடுத்த வழி, எக்காளம் ஊதி அதை மும்முறை சுற்றி வருவது… இதுவும் பைத்தியக்காரத்தனமானது தான்… ஆனால் அம் மதில் இடிந்து விழுந்தது…எப்போதுமே வழியே இல்லை, எனும் நிலையில் தான் கடவுளின் அருள் மிகுதியாய் விளங்கும். இதற்கு என் வாழ்வில் பல உதாரணங்களை பார்த்திருக்கிறேன்.கடவுளை மூடத்தனமாக நம்பி, உன் பணியை ஒழுங்காக செய்தால் நிச்சயம் வெற்றி உனதே...
Posted by Jayarathina Madharasan at 12:05 AM

No comments:

Post a Comment