http://ammanchi.blogspot.com
அம்மாஞ்சி
[எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்]
அமுதுக்கும் தமிழ் என்று பெயர்!
மற்ற டிவிகளை ஒப்பிடும் போது விஜய் டிவியில் பல உருப்படியான, சிந்திக்க வைக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அனேகமாக வாரத்தில் ஒரு நாலு நாட்கள் யாராவது சோபாவில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள். இதை மாதிரி டாக் ஷோ நடத்த ரொம்பவே தில்லு வேணும்.
முதலில் சரியான நிகழ்ச்சி நடத்துனர்(Anchor) வேணும்.
மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சியை வடிவமைக்க தெரியனும்.
மூணாவது, நல்ல ஸ்டூடியோ தளம் அமையனும். ஒரு சில டிவிகள் வாய்கால் ஓரங்களில் எல்லாம் பேட்டி எடுக்கிறார்கள். பேக்ரவுண்டில் ஒருத்தர் சொம்பை தூக்கி கொண்டு நமக்கு தரிசனம் தருகிறார்.
இல்லாட்டி பொதிகையில் ஒரு காலத்தில் வந்த செவ்வாய் கிழமை நாடகம் மாதிரி ஆகி விடும். :)
"தமிழ் எங்கள் பேச்சு!" என ஒரு நிகழ்ச்சி நடந்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக தமிழகத்தின் தமிழ் ஆர்வலர்களை வடிகட்டி இப்போ நிகழ்ச்சி களை கட்ட தொடங்கி விட்டது. வெகு காலத்துக்கு பிறகு இனிய தமிழை அதுவும் தனியார் டிவியில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. போட்டியில் பங்கு பெறுபவர்களும் சளைத்தவர்களாக தெரியவில்லை. கவிதை சுற்று, எதுகை மோனை சுற்று என தெள்ளமுதாய் தமிழ் பிரவாகமெடுத்து வருகிறது. ஐந்து நிமிடங்களுக்கு மேல் இப்போதெல்லாம் எந்தவொரு நிகழ்ச்சியையும் பாக்க முடியாத நிலையில், இது போன்ற நிகழ்ச்சிகள் அத்தி பூத்தாற் போல வருவது மனதுக்கு இதமாக உள்ளது.
பல புதிய தமிழ் சொற்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் முன் இலக்கியமோ, பின் இலக்கியமோ என்னை மாதிரி பட்ஜட் பத்மநாபனுக்கும் புரியும்படி பேசினார்கள்! எனபது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம். அதுவும் தமிழ்மணத்துக்கு ஒவ்வாத சொற்கள் அறவே இல்லாமல் பின்னிலக்கியமும் பேசபடுகிறது. ஒரு வேளை *** தான் பின்னிலக்கியமோ? என்ற எனது மாயை விலகியது. நிகழ்ச்சியை வெகு சுவாரசியமாக சின்ன சின்ன தகவல்களுடன் நெல்லை கண்ணன் கொண்டு செல்லும் அழகே அழகு. நிறை குடம் என்றும் தளும்புவதில்லை.
விஜய் டிவியின் கிரியேட்டிவ் டீமுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நேரம் இருந்தால் நீங்களும் கண்டு களியுங்கள்.
திருவாய் மலர்ந்தது அம்பி @ 5:33 PM
At Tue Jul 22, 06:10:00 PM, பரிசல்காரன் said…
அது தினமுமா வருது? இல்லையே?தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகிறது. அதன் மறு ஒளிபரப்பு திங்கள் இரவு 10 மணிக்கு வருகிறது. ஒவ்வொரு சுற்றுக்கும் நெல்லை கண்ணனுடன் ஒவ்வொரு தமிழறிஞர்கள் நடுவர்களாகப் பங்குபெறுகிறார்கள். அந்த வகையில் நெல்லை கண்ணனுடன் அறிவுமதி, நடிகர் சிவகுமார், நாஞ்சில் சம்பத், சுப.வீரபாண்டியன் (சன் டி.வி. வீரபாண்டியன் அல்ல!) என்ற வகையிலே இப்போது கவிஞர் விவேகாவும், சிநேகனும் நடுவர்களாக தமிழ்க்கடலுடன் அமர்ந்திருக்கிறார்கள். (யார் பேராவது விட்டுப் போச்சா?) இந்த நிகழ்ச்சியின் விளம்பரம் வந்த நாள் தொட்டு தவறாமல் பார்த்து வருகிறேன்!நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!
At Tue Jul 22, 06:17:00 PM, ambi said…
வாங்க பரிசல், நீங்க தான் முத போணி. //அது தினமுமா வருது? இல்லையே?//விஜய் டிவிகாரங்க மறு மறு ஒளிபரப்பராங்களா, அதான் கொஞ்சம் குழப்பமாயிட்டேன். :)அந்த நிகழ்ச்சிய வெச்சு பதிவு போட ஏதாவது மேட்டர் (விஷயம்) கிடைச்சதா பரிசல்? :p
At Tue Jul 22, 07:50:00 PM, தமிழன்... said…
எனக்கும் விஜய் டிவிதான் நல்லாருக்குன்னு படுது நிகழ்ச்சிகளை வச்சுதான் சொல்றேன்...
நன்றி :))
At Tue Jul 22, 08:58:00 PM, rapp said…
நான் இப்போ கொஞ்சம் நாளாகத் தான் பாக்கறேண்ணே, நெஜமாவே ரொம்ப நல்லாருக்கும் :):):)
At Tue Jul 22, 09:36:00 PM, ச்சின்னப் பையன் said…
நான் பாத்ததேயில்லீங்க... யூட்யூப்லே கிடைக்குதான்னு பாக்கறேன்...
At Tue Jul 22, 10:10:00 PM, பரிசல்காரன் said…
அடப்பாவிகளா.. இந்த நிகழ்ச்சியப் பாக்காத ஆளுகளும் இருக்காங்களா??இத வெச்சு ஒரு பதிவத் தட்டீர வேண்டியதுதான்!!சிக்கீட்டாய்ங்கள்ல??
At Wed Jul 23, 09:05:00 AM, தமிழ் பிரியன் said…
நல்ல நிகழ்ச்சி போலத் தெரிகின்றது. ஆனால் இங்கு பார்க்கும் வாய்ப்பு இல்லை....
Monday, October 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment