Wednesday, October 7, 2009


இது ஒரு நல்ல முயற்சி!.


விஜய் தொலைகாட்சியில் வரும் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் வரும் பேச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பேசுவதை பார்க்கும் போது அதில் அவர்களது உழைப்பு மிளிர்கின்றது. நடுவர் திரு. நெல்லை கண்ணன் அவர்கள் சிறந்த அறிவுமான். அனால் அவர் நாடு நடுவே பேச்சாளர்களை நிறுத்தி அவருடைய கருத்தை தெரிவிப்பது மற்றும் தவறுகளை சுட்டி கட்டுவது சற்று எரிச்சல் அடைய செய்கின்றது.அவருடன் வரும் சக நடுவர்கள் வாய் மூடி அமர்ந்து இருப்பது திருத்தபடவேண்டும். திரு. சிவகுமார் கலந்து கொண்ட சில சுற்றுகளில் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தியது ஏனோ சற்று எரிச்சலை ஏற்படுத்தியது.பேச்சாளர்கள் அனைவரும் சங்க இலக்கியம், கவிதை தொகுப்புகள் ,கட்டுரைகள் மற்றும் அரசியல் பேச்சுக்களில் நன்கு தத்தமது பங்களிப்பை நன்கு வெளிப்படுத்தினார். தமிழ் பேச்சு எங்கள் மூச்சு - இது ஒரு நல்ல முயற்சி!.
http://bashkaran.blogspot.com/

No comments:

Post a Comment