Thursday, October 8, 2009




விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் “ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு” நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக ஒளிப்பரப்பான “தமிழா நீ பேசுவது தமிழா” என்ற சுற்று சுவாரஸ்யமாக இருந்தது.
அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் (பேரு ஜனனி… சூப்பரா இருக்காங்க… :-)) நாம் நடைமுறையில் பேசுவது போல் ஒரு சொற்றொடரை கூறுவார். அதாவது ஆங்கிலம், சமஸ்கிருதம் கலந்து. அதை போட்டியாளர் தமிழ் வார்த்தைகளால் கூற வேண்டும். நிஜமாகவே ரொம்ப கஷ்டங்க. மற்ற சுற்றுகளில் ஜொலித்தவர்கள் கூட (தமிழாசிரியர்களும்) இதில் திணறினார்கள். உதாரணத்திற்கு, பெட்ரோல், டிராக்டர், ரிலாக்ஸ் போன்ற வார்த்தைகளை நினைத்து பாருங்கள். நடுவர்கள் நெல்லை கண்ணன், சுப.வீரபாண்டியன் அருமையாக பேசினார்கள்.
நெல்லை கண்ணன் ஒரு நவீனகால இளைஞன் கூறியதாக இதை கூறினார், “தமிழுக்கு ஒரு கஷ்டம் என்றால் அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. We will fight for it”!!!. தமிழை அடிப்படையாக வைத்து அமைந்துள்ள இந்த நிகழ்ச்சிக்காக விஜய் டிவியை பாராட்டலாம், நிகழ்ச்சியின் முடிவில் ஆங்கிலத்தில் காட்டப்படும் எழுத்தையும் (டைட்டிலையும்) தமிழில் காட்டினால்.
-------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment