
திரைப்படம்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், பத்திரிக்கைகள் என ஊடகங்களில் நான்...Tuesday, August 19, 2008
எத்தனையோ தமிழ் தொலைக்காட்சிகள் வசதியிருந்தும் வாய்ப்பிருந்தும் செய்யாததை, விஜய் டிவி தொடர்ந்து செய்து கொண்டிருக்க்கிறது. நடுவராக நெல்லை கண்ணன். நெல்லை கண்ணன் காங்கிரஸ்வாதியாக இருந்தாலும் வித்தியாசமானவர். நல்ல பேச்சாற்றல் மிக்கவர்.
பட்டிமன்ற ராஜாவை சிறப்பு விருந்தினராக கொண்டு புதிய கால தொடர் தொடங்கியிருக்கிறது.அரட்டை அரங்க திடீர் பேச்சாளர்களை கண்டு ஓடும் நிலையில் இந்த நிகழ்ச்சி உண்மையிலே வரம் தான்.இந்த தொகுப்பில் செல்பேசி, அறிவியல் வளர்ச்சியின் தாக்கம், இன்றைய இளைஞர்களின் நாட்டுப்பற்று மற்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என வெவ்வேறு தலைப்புகளில் அசத்தி விட்டார்கள் பேசியவர்கள்.
ராணுவ வீரனின் மரணம் தியாகம் பெரிய விசயமில்லை என தவறாக பொருள் படும் படி பேசியவரை ஒரு ஆசிரியராக கண்டிப்புடன் திருத்தி (ஆச்சர்யம்: பேசியவரும் ஆசிரியர் தான்) மேடை பேச்சுக்கு வேண்டிய கவனத்தை உணர்த்தினார் நெல்லை கண்ணன்.அதே வேளையில் நடந்த விசயங்களை மேற்கோள் காட்டுகையில் உள்ள திரிதலையும் சுட்டிக்காட்டினார்.அறிவியல் வளர்ச்சியின் தாக்கம் பற்றி பேசியவர் உலக அரசியலயையும் தொட்டு பேசினார்.
செல்லப் பையனும் குட்டி பையனும் துணுக்கு அருமை.அதிகமாக உணர்ச்சி வச்சபட்டதானலையோ என்னவோ எதிர்வாதம் செய்தவரை எள்ளல் செய்தார். தவிர்த்திருக்கலாம். பேசியவரின் ஆளுமையும், பேச்சு நடையும், நினைபபாற்றலும் வைகோவை ஞாபக படுத்தியது. .தமிழ் ஆர்வம் உள்ள எவரும் காண வேண்டிய நிகழ்ச்சி இது. கண்டிப்பாக பாருங்கள்.இந்த நிகழ்ச்சி நீண்ட காலம் தொடர வேண்டும்
No comments:
Post a Comment